செவ்வாய்க்கிழமையில நகம், முடி வெட்டக்கூடாது… இதுல இவ்ளோ அறிவியல் காரணங்களா?

நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதை நாம் மூடநம்பிக்கை என எள்ளி நகையாடுவதுண்டு. ஆனால் அது உண்மை அல்ல. அதற்குப் பின்னால் பெரிய அளவில் அறிவியல் உண்மை இருக்கிறது. உதாரணமாக செவ்வாய்க்கிழமை முடிவெட்டக்கூடாது, நகம்…

hair cut

நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதை நாம் மூடநம்பிக்கை என எள்ளி நகையாடுவதுண்டு. ஆனால் அது உண்மை அல்ல. அதற்குப் பின்னால் பெரிய அளவில் அறிவியல் உண்மை இருக்கிறது. உதாரணமாக செவ்வாய்க்கிழமை முடிவெட்டக்கூடாது, நகம் வெட்டக்கூடாதுன்னு பெரியவங்க சொல்றதைப் பார்த்திருப்போம். இது மூடநம்பிக்கை அல்ல. வாங்க இதுல என்ன அறிவியல் இருக்குன்னு பார்ப்போம்.

ஆயுர்வேதா நம் முடி மற்றும் நகத்தை நமது நரம்பியல் மண்டலத்துடன் தொடர்பு படுத்துகிறது. அடிக்கடி முடி மற்றும் நகத்தை வெட்டுவது..நமது உடலை சமநிலைக்கு கொண்டு வரும் ஆற்றலை ..தடுக்கும். ஆதிகாலத்தில் சந்திரனின் சுழற்சியை கணித்தவர்கள்.

முழு நிலவை காணும் நாள் பௌர்ணமி மற்றும் நிலவு முற்றும் மறைந்து காணும் அமாவாசை போன்ற சில நாட்களில் நம் முடியில் நீர் தக்கவைப்பு, நீரேற்ற ஆற்றல் நிலை ஆகியவற்றை மட்டுப்படுத்தும். அந்த நாட்களில் முடித் திருத்தினால் முடி வறட்சி அடைந்து முடி உதிரும் நிலைக்கு தள்ளப்படும்.

ஆனால் செவ்வாயன்று முடி வெட்டக்கூடாது என்று ஏன் கூறினார்கள் ? வேத ஜோதிடத்தில் செவ்வாய் கிழமை வெப்பத்துக்கும் ஆக்ரோஷத்துக்கும் பெயர் போன செவ்வாய் கிரகத்துடன் இணைத்து பேசப்படும். இந்த நாட்களில் நாம் முடிதிருத்தினால் நமது உடல் ஆற்றல் மற்றும் உடல் வலிமை ஆகியவற்றை குறைக்கும்.

விஞ்ஞான ரீதியாக செவ்வாய் கிரகம் உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகமாக்கும். அதனால் ஆயுர்வேத சிகிச்சை முறை பயிற்சியில் அதிக ஆற்றல் நாட்களாக கருதப்படும் செவ்வாய் போன்ற நாட்களில் முடித்திருத்துவதை தவிர்த்தல். மன அழுத்தம் போன்றவற்றை குறைத்து உடல் சமநிலைக்கு கொண்டுவர பேருதவி புரிய உதவும். ஆகையால் இது மூடப்பழக்கம் கிடையாது. மனித உயிரியல் மற்றும் உடலியல் சம்பந்தபட்டது..