isha

வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டுமா? இதை மட்டும் கரெக்டா ஃபாலோ பண்ணுங்க!

வாழ்க்கையில் முன்னேற எல்லாருக்குமே ஆசைதான். நாம முன்னேறி படிப்படியா மேலே போகணும்னா இந்த ஒரு விஷயத்தை வீணடிக்கவே கூடாது. போனா திரும்ப வராத ஒண்ணு இந்த நேரம். வள்ளுவர் சொல்றது இதுதான். ஞாலம் கருதினும்…

வாழ்க்கையில் முன்னேற எல்லாருக்குமே ஆசைதான். நாம முன்னேறி படிப்படியா மேலே போகணும்னா இந்த ஒரு விஷயத்தை வீணடிக்கவே கூடாது. போனா திரும்ப வராத ஒண்ணு இந்த நேரம்.

வள்ளுவர் சொல்றது இதுதான்.

ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி

இடத்தாற் செயின்.

உலகத்தையே கைக்கு கொண்டு வரணும்னா அதற்கு என்று ஒரு காலத்தையும், இடத்தையும் தேர்வு செய்து உழைக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

நேரத்தை நம்மில் பலர் வீணாக்கி வருகிறோம். பலரும் நேரமே பத்த மாட்டேங்குதுன்னு சொல்றாங்க. நல்லா வெற்றியை அடைந்தவர்களுக்கும் 24 மணி நேரம்தான். முயற்சி பண்றேன்னு சொல்றவங்களுக்கும் அதே 24 மணி நேரம்தான். நேரம் பத்தாதுன்னு சொல்லவே கூடாது.

திட்டமிட்டு அந்த நேரத்துக்கு ஏற்றாற்போல் உழைத்தால் நிச்சயமாக இறைவனின் அருள் கிடைக்கும். சிலர் வேலை செய்றேன் வேலை செய்றேன்னு சொல்லிட்டு காலையில இருந்து சாயந்திரம் வரை வேலை செய்வாங்க. ஆனா எதையும் ஒழுங்கா முடிச்சிருக்க மாட்டாங்க.

அந்த வகையில் நேரத்தைப் பயன்படுத்துவதில் முக்கியமான விஷயம் திட்டமிடுதல். எவ்வளவு நேரம் ஆகும்? என்னவெல்லாம் செய்யலாம்? எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொண்டால் வேலையைச் சுலபமாக செய்ய முடியும்.

தேவையற்ற விஷயங்களுக்குச் செலவு செய்ற நேரத்தை நிறுத்தி விட்டால் தேவையான விஷயங்களைச் செய்ய நிறைய நேரம் இருக்கும். நவீன வளர்ச்சியால் மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின் எல்லாம் நம் நேரத்தை மிச்சப்படுத்தியது. அதே நவீன வளர்ச்சியால வந்த டிவி, மொபைல் எல்லாம் நம் நேரத்தை சாப்பிடுது.

ஒண்ணுமே இல்லன்னாலும் சும்மா அதைப் பார்த்துக்கிட்டே இருப்பாங்க. அதனால இனி தேவைக்கு மட்டும் இதுபோன்ற சாதனங்களைப் பயன்படுத்துங்க. திட்டமிட்டு நேரத்தில் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்தால் வெற்றி நிச்சயம்.