தினமும் மூணு வேளை உணவு சாப்பிடுவது நல்லதா…கெட்டதா?

By Sankar Velu

Published:

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மாதுளை பழம் சாப்பிடலாம். ஆப்பிள் எடுத்துக் கொள்ளலாம். வாழைப்பழம் மட்டும் சாப்பிடக்கூடாது. ஏன்னா அதுல பொட்டாசியம் அதிகமா இருக்கு. அதனால மூளையை சேதப்படுத்தும். மதியம் தான் வாழைப்பழம் எடுக்கணும்.

அதுக்கு அப்புறம் முளை கட்டிய பயிரை எடுக்கலாம். அப்புறம் ஒரு இட்லி அல்லது ஒரு வடை அல்லது ஒரு பூரி எடுத்துக்கலாம். கடைசியில் ஒரு கப் பால். அல்லது கேப்பை கூழ், கம்பு, திணை, கேழ்வரகு எடுத்துக்கலாம். மதியம் சாதத்துடன் கூட்டு பொரியல் எடுத்துக்கலாம். மாலை ஒரு சூப் குடிங்க. இரவு சாப்பாட்டை மாலை 6 அல்லது 6.30க்குள் சாப்பிட்டு முடிச்சிடுங்க.

veg soup 1
veg soup

காலையில் பிரியாணி, புரோட்டா என கடினமான உணவை சாப்பிட மாட்டோம். காலையில் ராஜா மாதிரி சாப்பிட வேண்டும். ஆனால் ஆபீஸ்க்கு போற அவசரத்துல கொஞ்சமா சாப்பிட்டுட்டுப் போவோம். மதியம் வேலை செய்றதால அதிக நேரமில்ல. நைட்டு தான் ப்ரீ டைம்னு நாம நிறைய சாப்பிடுறோம்.

மதியம் லஞ்ச்சக் கம்மி பண்ணி சாப்பிடலாம். நைட்டு பிச்சைக்காரன் மாதிரி சாப்பிடணும். பேங்களூருல போய்ப் பார்த்தா காலைல பத்து மணிக்குத் தான் விடியுது. அவங்களோட லைப் ஸ்டைலே ஸ்டார்ட்டாகுது. ஏன்னா அவங்க கிளைமேட் அப்படி. தமிழ்நாட்டுல தான் கிளைமேட் சூப்பரா இருக்கு. காலைல 6 மணிக்கு கரெக்டா விடியுது.

எல்லாரும் எழுந்து 9 டூ 6க்குள்ள வேலையை முடிச்சிடுறாங்க. கரெக்டான தட்பவெப்பநிலை இங்கு தான் நிலவுகிறது. அதனால தான் எல்லாரும் இங்க வந்து தொழில் தொடங்குறாங்க. அதனால காலைல நல்லா சாப்பிடுங்க. ஜீரணமாயிடும். மத்தியானம் கொஞ்சம் குறைவா சாப்பிடுங்க. நைட் ரொம்பவே கம்மியா சாப்பிடுங்க.

banana
banana

சித்தர்கள் என்ன சொல்றாங்கன்னா மூணு வேளையும் சாப்பிடுறவன் முட்டாள். 2 வேளை தான் சாப்பிடணுமாம். 1 வேளை சாப்பிடுறவன் தான் யோகியாவான். அந்த ஒரு வேளையும் பசிச்சாத் தான் சாப்பிடணுமாம்.

mulai kattiya payir
mulai kattiya payir

காலையில் கடினமான உணவை எடுத்தால் வெயிட் போடாது. நைட் சாப்பிடுறதால தான் வெயிட் போட்டு நாம குண்டாகி தொப்பை எல்லாம் விழுது. எல்லோரும் மாவுச்சத்துப் பொருளைத் தவிர்க்கிறாங்க. அது ரொம்ப தவறு. மூளைக்கு கார்போஹைட்ரேட்டை அனுப்பலேன்னா மூளை இறந்து கோமா ஸ்டேஜிக்குப் போயிடுமாம்.

ரொம்ப குண்டா இருக்குறவங்க சாப்பிடலேன்னா ஏன் மயக்கம் வருது? அவங்களுக்கு குளுக்கோஸ் மட்டும் தான் தேவை. மூளைக்கு அதுதான் தேவை. மூளைக்கு அது இல்லைன்னா வேலை செய்யாது.

எல்லாம் சரிதான். கஷ்டப்பட்டு காட்டுல மேட்டுலன்னு வேலை பார்க்குறவங்களுக்கு மூணு வேளை உணவு கூட கிடையாதான்னு கேட்கறது புரியுது. கஷ்டப்பட்டு உடல் உழைப்பைக் கொடுக்கறவங்க சாப்பிடுறதுல தப்புல்ல. ஈசியா சேர்ல உட்கார்ந்து வேலை பார்க்குறவங்களுக்கு அதிக உடல் உழைப்பு இருக்காது. அவங்களுக்கு மூளைக்கான வேலை அதிகமா இருக்கும். ஆனா இரு தரப்பினருக்குமே சோர்வு இருக்கும்.

Leave a Comment