மீண்டும் மீண்டும் தோல்வியா? நீங்க செய்ய வேண்டியது இதுதான்!

வெற்றி என்பது தோல்வி என்ற ஒன்று இருப்பதால்தான் நமக்குத் தெரிகிறது. ஒரே வெற்றியாக வந்தாலும் ஒரு கட்டத்தில் போர் அடித்து விடும். கஷ்டம், வலின்னா என்னன்னே தெரியாமல் போயிடும். அதனால் வெற்றி தரும் பாடங்களை…

வெற்றி என்பது தோல்வி என்ற ஒன்று இருப்பதால்தான் நமக்குத் தெரிகிறது. ஒரே வெற்றியாக வந்தாலும் ஒரு கட்டத்தில் போர் அடித்து விடும். கஷ்டம், வலின்னா என்னன்னே தெரியாமல் போயிடும். அதனால் வெற்றி தரும் பாடங்களை விட தோல்வி தரும் பாடங்களே அதிகம். அதே நேரம் தோல்வியில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு வெற்றியை நோக்கி முன்னேற வேண்டுமே தவிர மீண்டும் மீண்டும் தோல்வியில் துவளக்கூடாது.

முடியாது என்று முடங்கி விட்டால் வேதனை தான். முடியும் என்று எழுந்து விட்டாலே அது சாதனையாகும். வாழ்க்கையை அழகாக்க அன்பு வேண்டும். அன்பை அழகாக்க புரிதல் வேண்டும். சுலபமான வாழ்க்கை எதையும் கற்பிக்காது. நீங்கள் கற்ற அனுபவமே உங்களை சிற்பமாக செதுக்கும். கிடைத்த இடத்தில் தன்னை செடியாகவோ மரமாகவோ மாற்றிக் கொள்கின்றன விதைகள்.

விழும்போது வலிக்கிறது. அது எழுந்துவிட்டால் மறைந்து விடும். துணிவுடன் எழுந்து நில். செயல்படு. வெற்றி உனதே. காலத்துக்கும் அது வரும் வரும் என காத்துக்கிடக்காதே. காலம் எவருக்காகவும் தன் தோற்றத்தை மாற்றி அமைப்பது இல்லை. அதன் கடமையை அது சரியாகச் செய்து கொண்டு இருக்கிறது. அவர்கள் கடமையை அவர்கள் மட்டும்தான் செய்ய முடியும். உன் மாற்றத்தை உன்னால் மட்டும்தான் மாற்ற இயலும். சிந்தித்து செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்.

வெற்றியை நோக்கி நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிகளும் தோல்வி தந்த பாடம் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதே. அதுதான் நம்மை அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்த்தும்.