தயிர் மற்றும் மோர் ஆகியவை செரிமானத்திற்கு எளிமையானவை என்றாலும், அவற்றை சூடான சாதத்தில் கலந்து சாப்பிடுவது உடலுக்கு கேடு விளைக்கும் என்பது தெரியவந்துள்ளது.
பரபரப்பான வாழ்க்கைச் சூழ்நிலையில் அனைத்தையுமே வேக, வேகமாக செய்ய பழகிவிட்டோம். உட்கார்ந்த இடத்திலேயே பல மணி நேரம் வேலை பார்ப்பது, ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் ஜங்க் ஃபுட் வகைகளை அதிக அளவில் உட்கொள்வது, மறந்தும் உடற்பயிற்சி செய்யாததது என பலவிஷயங்களை ஆரோக்கியத்திற்கு எதிராக செய்து வருகிறது.
இந்நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்த தயிர் சாதத்தை அவசரம் காரணமாக இப்படிச் சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு ஏற்படக்கூடும் என்பது தெரியவந்துள்ளது. ஆம், சீக்கிரமாக சாப்பிட்டுவிட்டு கிளம்ப வேண்டும் என்பதற்காக சூடான சாதத்தில் தயிரை ஊற்றி வேக, வேகமாக சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கும்.
ஆனால் அவ்வாறு சாப்பிடக்கூடாது. தயிர் மற்றும் மோரில் நிறைய கால்சியம், வைட்டமின் டி, புரதம், நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன, இவை செரிமானத்திற்கு உதவக்கூடியதாக உள்ளது. ஆனால் சூடான சாதத்துடன் தயிர் அல்லது மோர் கலந்து சாப்பிடும் போது ஏற்படும் ரசாயன மாற்றம் செரிமானத்தை கடினமாக்குவதோடு, மலம் கழிப்பதிலும் சிக்கலை ஏற்படுத்தும் என சில ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
எனவே சூடான சாதத்தை நன்றாக ஆற வைத்த பின்னர் தயிர் கலந்து சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதேபோல் ப்ரிட்ஜில் இருந்து தயில் அல்லது பாலை வெளியே எடுத்த உடனேயே பயன்படுத்தாமல், அவை அறை வெப்பநிலைக்கு வந்த பின்னர் சாப்பிடுவது நல்லது.