கடுமையான கர்ப்ப கால இடுப்பு வலி?? இந்த 7 வழிமுறைகளை பின்பற்றி பாருங்கள்!

By Sowmiya

Published:

பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்ப காலத்தின் போது இடுப்பு வலி ஏற்படுகிறது. இந்த கர்ப்ப கால இடுப்பு வலி கர்ப்பிணி பெண்களுக்கு பெரும் தொந்தரவுக்கு ஆளாக்கி விடும். கர்ப்ப காலத்தில் போது உடல் எடை அதிகரித்தல், ஹார்மோன் மாற்றத்தினால் இடுப்பு, முட்டி எலும்புகளில் ஏற்படும் தளர்வு போன்ற பல்வேறு காரணங்களை இடுப்பு வலி ஏற்படலாம். இதனை எப்படி கையாளலாம் என்பதை பார்ப்போம்.

கர்ப்ப கால இடுப்பு வலி கையாளும் முறை:

istockphoto 1217055927 612x612 1

1.  சரியான உடல் தோரணையை பின்பற்றுதல்:

கர்ப்ப காலத்தில் குழந்தை வளர வளர உடலின் ஈர்ப்பு மையமானது முன்னோக்கி நகரும். அப்பொழுது கீழே விழுந்து விடாமல் இருக்க அவர்களை அறியாமலே உடலை பின்னோக்கி வளைப்பதால் இடுப்பின் பகுதிகள் அழுத்தம் ஏற்பட்டு வலி உண்டாகும்.

எப்பொழுதும் நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். தோள் பகுதிகளை தளர்வாக பின்னோக்கி வைத்திருக்க வேண்டும் தொடர்ந்து நிற்காது அவ்வபோது ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். உட்காரும்பொழுது முதுகுக்கு ஆதரவு தரக்கூடிய நாற்காலிகளை பயன்படுத்தலாம் இல்லையேல் ஒரு சிறிய தலையணையை முதுகுப்புறத்தில் ஆதரவாக வைத்துக் கொள்ளலாம்.

2. சரியான காலணிகள்:

பாதங்களுக்கு மென்மையான, தட்டையான, தரமான காலணிகளை பயன்படுத்தவும். கர்ப்ப காலத்திற்கு என்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட காலணிகளை உபயோகிக்கலாம்.

3. குனிந்து நிமிருவது:

ஏதேனும் பொருட்களை தூக்க வேண்டும் என்றால் அதிகமாக குனிந்து நிமிருவதை தவிர்க்கவும். உட்கார்ந்து எடுக்கப் பழகவும். கீழே உட்கார்ந்து எடுப்பது உடற்பயிற்சியாக இருப்பதோடு மட்டுமில்லாமல் கர்ப்ப கால இடுப்பு வலி ஏற்படா வண்ணம் காக்கும்.

4. தூங்கும் முறை:

கர்ப்பிணிப் பெண்கள் ஒருகணித்து படுத்து உறங்குதல் அவசியம். தவறான தூங்கும் முறையினாலும் கர்ப்ப கால இடுப்பு வலி ஏற்படலாம். உறங்கும் பொழுது கால்களுக்கு இடையில் மென்மையான தலையணையை வைத்துக் கொள்ளலாம். முதுகுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் ஒரு தலையணையை வைத்துக் கொள்ளலாம்.

5. மசாஜ்:

மருத்துவர் அல்லது அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் துணையோடு மசாஜ் செய்து கொள்ளலாம். சூடான குளிர்ச்சியான மசாஜ் செய்வதன் மூலம் இடுப்பு வலி ஓரளவு குறையும். குளியல் நேரத்தின் பொழுது வெதுவெதுப்பான தண்ணீரை இடுப்பு பகுதியில் ஊற்றுவதன் மூலமும் கர்ப்ப கால இடுப்பு வலி சற்று நிவாரணம் பெறும்.

6. உடல் இயக்கம்:

istockphoto 619062186 612x612 1

நடைபயிற்சி போன்ற மென்மையான உடல் இயக்கம் தரக்கூடிய உடற்பயிற்சி ஏதேனும் செய்யலாம். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் வேறு ஏதும் கடுமையான உடற்பயிற்சிகள் செய்யக்கூடாது.

7. கூடுதல் சிகிச்சைகள்:

அக்குபஞ்சர் போன்ற வேறு ஏதும் கூடுதல் சிகிச்சை தேவைப்பட்டால் மருத்துவர் ஆலோசனையோடு எடுத்துக் கொள்ளலாம்.

அதிகரிக்கும் கர்ப்ப கால சர்க்கரை நோய்க்கான காரணங்கள் மற்றும் உணவு முறைகள்…!

கர்ப்ப கால பயணத்தின் பொழுது வரும் சவால்களில் ஒன்றுதான் இந்த இடுப்பு வலி. கர்ப்பகால இடுப்பு வலி அனைவருக்கும் பொதுவானது தான் என்றாலும் வலி மிகவும் அசாதாரணமானதாக தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுகி விடுங்கள்.