தனுஷின் 50வது படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? இன்று பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு..

Published:

தென்னிந்திய திரையுலகின் முன்னணி இளம் ஹீரோவான தனுஷின் 50வது திரைப்படத்தின் பேச்சு தான் சோசியல் மீடியாவில் தற்பொழுது பயங்கரமாக டிரெண்ட் ஆக உள்ளது

தனுஷ் அவர்கள் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆனால் அதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க தன்னை பிசியாக வைத்துள்ளார் தனுஷ்.

அந்த வகையில் தன்னுடைய ஐம்பதாவது படத்தை தானே இயக்கி, நடிக்க போவதாக தனுஷ் தெரிவித்துள்ளார். அந்த திரைப்படம் ரொம்பவே ஸ்பெஷல் என்பதால் அந்த படத்திற்கான கிரிடிட்ஸ் எல்லாமே அவருக்கு தான் வர வேண்டும் என்பதில் ஆரம்பத்தில் இருந்து தனுஷ் ரொம்பவே குறிக்கோளாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.

இந்த படத்துக்கான பூஜை இன்று சத்தமில்லாமல் ஈசிஆரில் அமைதியாக நடந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் டீசரையும் சீக்கிரமாக வெளியிட வேண்டும் என படக் குழு பயங்கரமாக பிளான் போட்டு உள்ளார்கள்.

குறிப்பாக தனுஷ் அவர்களால் தான் படத்திற்கான ஒரு டைட்டிலை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. அதாவது ராயன் என தனுஷ் தனது ஐம்பதாவது படத்திற்க்கு டைட்டில் வைத்துள்ளார். சன் பிச்சர்ஸ் கலாநிதி மாறன் இந்த படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படம் வடசென்னை மையப்படுத்தி பழி வாங்குகின்ற கதையை வைத்து எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

அதனால் இந்த படம் வடசென்னையின் இரண்டாம் பாகமாக இருக்குமோ என்ற சந்தேகமும் வந்துள்ளது. மேலும் இந்த படத்திற்காக பிரம்மாண்டமான செட்டு அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. அதாவது ஒரே இடத்தில் கிட்டத்தட்ட 500 வீடுகள் இடம் பெறுகின்றன. அது மாதிரியான செட்டுகள் எல்லாம் அமைத்து வருகிறார்.

ரஜினியின் ரகசியத்தை மேடையில் உடைத்த எதிர்நீச்சல் சீரியல் வில்லன்! வாயை பிளக்கும் அப்டேட்!

அடுத்த வாரம் இந்த படத்தோட படப்பிடிப்பு தொடங்க இருக்கின்ற நிலையில 90 நாட்களிலேயே இந்த படத்தின் படபிடிப்பை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அதனால் வரும் அக்டோபர் மாதத்துக்குள் முழு படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்படும் என கூறப்படுகிறது. படத்தின் கூடுதல் சிறப்பம்சமாக இசை புயல் ஏ. ஆர் ரகுமான் தான் படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில் மற்ற நடிகர், நடிகைகள் யார் யாரெல்லாம் நடிக்க உள்ளார் என்ற விவரங்கள் எல்லாம் அடுத்தடுத்து வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போழுது கேப்டன் மில்லர் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானதால் படத்தின் டீசருக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் தனுஷ் 50 வது படத்தின் போஸ்டர் பார்ப்பதற்கு பயங்கரமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...