8 கிமீ நீளத்தில் படகு சேவை மேம்படுத்தும் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், இதற்காக டெல்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேம்பாட்டு கழகம் திட்ட ஒப்பந்தத்தை வெளியிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு சோலார் அல்லது மின்சார பேட்டரி இயக்க படகுகளை செயல்படுத்தும் ஆபரேட்டர் தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. 7 முதல் 8 கிலோமீட்டர் தூரம் வரை இந்த படகு மூலம் சவாரி செய்யலாம் என்றும், இதற்கான உள்கட்டமைப்பு பணிகளும் விரைவில் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு படகிலும் 20 முதல் 30 பயணிகள் அமர முடியும். 5 முதல் 7 கிலோமீட்டர் வேகத்தில் இந்த படகுகள் செல்லும். மின்சார, சோலார், ஹைபிரிட் படகுகள் இதற்காக பயன்படுத்தப்படும். மேலும், ஏசி வசதியுடன் கூடிய சிறப்பு படகுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
இன்னும் சில மாதங்களில் யமுனை நதி தூய்மைப்படுத்தப்பட்டு, அதில் சொகுசு படகு சவாரி செய்யலாம் என்பதால், இது டெல்லி மக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.