துபாயில் தங்கம் இந்தியாவை விட சுமார் 8-9% குறைந்த விலையில் கிடைக்கிறது. இதற்கான முக்கிய காரணங்கள்: தங்க ஏற்றுமதிக்கு மதிப்புசார் வரி (VAT) துபாயில் இல்லை. மேலும் குறைந்த உற்பத்தி செலவுகள். இந்த விலை வித்தியாசம் துபாயை இந்தியர்களுக்கான பிரபல தங்க வணிக மையமாக மாற்றுகிறது. இந்த தங்கத்தை துபாயில் இருந்து இந்தியாவுக்கு தங்கத்தை சட்டப்படி கொண்டு வருவதற்கான வழிகளை பார்ப்போம்.
முதலில் நீங்கள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக வெளிநாட்டில் வசித்திருக்க வேண்டும். இந்த காலத்தில் 30 நாட்களுக்கு குறைவான இந்திய பயணங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
அனுமதிக்கப்பட்ட தங்க வரம்பு:
ஆண்கள்: 20 கிராம் வரை (மதிப்பு ₹50,000 வரை) – சுங்கவரி இல்லை
பெண்கள்: 40 கிராம் வரை (மதிப்பு ₹1,00,000 வரை) – சுங்கவரி இல்லை
15 வயதுக்கு குறைந்த பிள்ளைகள்: 40 கிராம் வரை – சுங்கவரி இல்லை
அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக தங்கம் கொண்டுவரும் போது விதிக்கப்படும் சுங்கவரி:
ஆண்களுக்கு 50 கிராம் வரை, பெண்களுக்கு 100 கிராம் வரை: 3% சுங்கவரி
ஆண்களுக்கு 50–100 கிராம், பெண்களுக்கு 100–200 கிராம்: 6% சுங்கவரி
ஆண்களுக்கு 100 கிராமுக்கு மேல், பெண்களுக்கு 200 கிராமுக்கு மேல்: 10% சுங்கவரி
சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் அறிவிப்புகள்:
தங்கத்த்தின் அளவை சுங்க சோதனையின்போது அறிவிக்க வேண்டும்.
தங்கத்தின் தூய்மை மற்றும் விலையை சுட்டிக்காட்டும் ரசீதுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் தங்கம் கொண்டுவரும் பட்சத்தில், சுங்க வரியை செலுத்த தயாராக இருக்க வேண்டும்.
முக்கிய குறிப்புகள்:
துபாயில் அங்கீகாரம் பெற்ற வியாபாரிகளிடமிருந்து மட்டுமே தங்கம் வாங்கவும்.
வாங்கிய ரசீதுகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும்.
தகுதியை நிரூபிக்க பாஸ்போர்ட் மற்றும் வீசா பதிவுகளை வைத்திருங்கள்.
சுங்க சோதனையை தவிர்க்க, தங்க நகைகளுக்கு மீது முன்னுரிமை அளிக்கவும், அதாவது தங்கக்கட்டிகளை தவிர்க்கலாம்.
இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றி, துபாயில் இருந்து இந்தியாவுக்கு சட்டபூர்வமாக தங்கம் கொண்டு வர முடியும். சரியான ஆவணங்கள், வரம்புகள் மற்றும் தேவையான கட்டணங்களை பின்பற்றுவதன் மூலம் சட்ட சிக்கல்களை தவிர்க்கலாம். தங்கம் வாங்கும் திட்டம் மற்றும் பயணத்தைக் கவனமாக திட்டமிட்டால் துபாயின் மலிவான தங்க விலைகளை சிறப்பாக பயன்படுத்தலாம்.