உறவினர்கள் சூழ.. கணவருக்கு காதலியுடன் 2 வது திருமணம் செய்து வைத்த மனைவி.. நெகிழ வைத்த காரணம்..

Published:

பொதுவாக திருமணம் என்பது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இணைந்து தங்களது ஒரு புதிய வாழ்வை தொடங்கும் முக்கியமான தருணமாகும். இந்தியாவில் உள்ள சட்ட திட்டங்கள் படி ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற வழியில் இயங்க, ஒருத்தரை மட்டுமே திருமணம் செய்து கொள்ள வாழ வேண்டும் என்றும் இன்னொருவரை திருமணம் செய்வது சட்ட விரோதமான செயலாகவும் இருந்து வருகிறது.

அப்படி வேறு ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டு பின்னர் தான் திருமணம் செய்து கொள்ளவும் முடியும். அதனைத் தாண்டி ஒருவருக்கே தகாத உறவு இருக்குமானால் அது குடும்பத்தில் மிகப்பெரிய அளவில் பிரச்சனை ஆவதுடன் மட்டுமில்லாமல் கணவன், மனைவி என்ற அழகான பந்தத்தில் விரிசல் ஏற்படவும் வழி வகுக்கும்.

இப்படி திருமண வாழ்க்கைக்குள் பல சட்ட சிக்கல்கள் இருக்கும் சூழலில் பெண் ஒருவர் அவரது கணவருக்காக இரண்டாவது திருமணத்தை செய்து வைத்த சம்பவம் தற்போது பலர் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.

தெலுங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள உக்கம்பள்ளி என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் அங்கே மனைவி ஒருவர் தனது கணவருக்கு இரண்டாவது திருமணத்தை செய்து வைத்துள்ளார்.

இதே கிராமத்தை சேர்ந்த தாசரி சுரேஷ் என்பவரும் சரிதா என்பவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள சூழலில், சுரேஷை அவரது தாய் மாமன் மகளான சந்தியா என்பவரும் காதலித்து வந்துள்ளார்.

ஆனால் தனது கணவரை வேறொரு பெண் காதலிக்கிறார் என்ற தகவலை அறிந்ததும் சரிதா நிச்சயம் கோபப்படுவார் என்று தான் அனைவருமே எதிர்பார்த்தனர். ஆனால் சந்தியா ஒரு மாற்றுத் திறனாளி பெண் என்பதால் தனது கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கவும் சரிதா முடிவு செய்துள்ளார்.

இது பற்றி பேசும் சரிதா, தனது கணவரை மாற்றுத் திறனாளி உறவு பெண் காதலித்து வந்ததாகவும் மனிதாபிமான முடிவில் இந்த திருமணத்தை தான் நடத்தி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் தனது குடும்பத்தில் இருக்கும் மற்றொரு பெண்ணாக சந்தியாவை தனது கணவர் திருமணம் செய்து கொண்டால் அவரை நல்லபடியாக பார்த்துக் கொள்வதற்காகவும் வீட்டில் அழைத்து வருவதற்காகவும் இந்த திருமணத்தை தான் நடத்தி வைத்ததாகவும் சரிதா கூறி உள்ளார்.

அது மட்டுமில்லாமல், முதல் திருமணம் போல உற்றார் உறவினர்களுடன் இந்த திருமண நடைபெற்ற சூழலில், அதனை சரிதாவே முன்னின்று நடத்தி வைத்திருந்தார். கணவருக்கு தனது முதல் மனைவியின் கண்முன்னே இரண்டாவது திருமணம் நடந்த நிலையில் இது பற்றி ஒரு பக்கம் பலர் ஆதரித்து வந்தாலும் இன்னொரு பக்கம் நிறைய விமர்சன கருத்துக்களும் உருவாகியுள்ளது.

மேலும் உங்களுக்காக...