வாட்ஸ் அப் மூலம் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் ரேட்.. விபச்சார கும்பலை சுற்றி வளைத்து பிடித்த காவல்துறை..!

  உத்தரப் பிரதேச மாநிலத்தில், வாட்ஸ் அப் மூலம் பெண்களின் புகைப்படங்களையும், அந்த பெண்களுக்கான ரேட்டையும் அனுப்பி விபச்சாரம் செய்த கும்பலை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்…

prostitute

 

உத்தரப் பிரதேச மாநிலத்தில், வாட்ஸ் அப் மூலம் பெண்களின் புகைப்படங்களையும், அந்த பெண்களுக்கான ரேட்டையும் அனுப்பி விபச்சாரம் செய்த கும்பலை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டது. முதலில், ஒரு அதிகாரி சம்பந்தப்பட்ட ஹோட்டல் மேனேஜர் ஒருவரை மாறுவேடத்தில் அணுகி, ‘தங்களுக்கு பெண்கள் வேண்டும்” என்று கேட்டதாகவும், அதற்கு அவர்கள் வாட்ஸ் அப் மூலம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி, ஒவ்வொரு பெண்ணின் ரேட்டையும் தெரிவித்ததாகவும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அதிரடியாக அந்த ஹோட்டலில் சோதனை நடத்தினர். இதில், விபச்சாரத்தில் ஈடுபட வைத்திருந்த ஐந்து பெண்களை மீட்டதோடு, இரண்டு மேனேஜர்களைச் சேர்த்து, இந்த விபச்சாரத்துக்கு தொடர்புடையதாகக் கருதப்படும் 12 பேரை கைது செய்தனர். ஹோட்டல் உரிமையாளர் ஜிதேந்திரகுமார் உள்பட தற்போது தலைமறைவாக உள்ளார்.

மேனேஜர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், “தங்களுடைய ரெகுலர் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பெண்களின் புகைப்படங்களையும், ரேட்டுகளையும் அனுப்புவோம். அதன் பிறகு, அவர்கள் தேர்வு செய்த பெண்ணை விபச்சாரத்துக்கு அனுப்பிவைப்போம்” என அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இந்த கும்பலை மாறுவேடத்தில் சென்று கச்சிதமாக பிடித்த காவல்துறைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.