இந்தியா ஒரு ஆன்மீக பூமி என்பது அனைவரும் அறிந்ததே,. இங்கு பல்வேறு மதங்களை சேர்ந்தோர் தங்கள் நம்பிக்கையை வெவ்வேறு விதமாக வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அனைத்து மதங்களிலும் உள்ள பொதுவாக ஒன்று மலர்கள் கடவுளுக்கு பயன்படுத்துவது.
ஆனால் மலர்கள் வழிபாட்டு தலங்களில் பெருமளவில் பயன்படுத்தப்படும் போது, அதிகமாக கழிவுகளாக மாறுகிறது. குறிப்பாக கோவில்களில் அர்ப்பணிக்கப்படும் மலர்கள், சுற்றுச்சூழல் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இந்த பிரச்சனைக்கு நவீனமான, சுற்றுச்சூழல் தீர்வை வழங்கி வருகிறது கான்பூரை சேர்ந்த Phool.co என்ற பயோமெட்டீரியல் ஸ்டார்ட்அப். கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டு பிறகு கழிவாக போன மலர்களுக்கு மீண்டும் மறுபிறவி கொடுக்கின்றது இந்த நிறுவனம்.
2017-ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ஸ்டார்ட்அப்பை உருவாக்கியவர், ஆட்டோமேஷன் விஞ்ஞானியாக பணியாற்றிய அன்கித் அகர்வால். இவர் 17 ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியவர்.
ஆரம்ப கட்டங்களில், பண்டிகைகளில் பயன்படுத்தப்பட்ட மலர்களை மறுபயன்படுத்தும் எண்ணம் நம்மில் பலருக்கும் சிரிப்பை உண்டாக்கியது. ஆனால் இவரை அந்த எண்ணம் அசைக்க முடியவில்லை. தங்கள் இலட்சியத்தை வெளிக்கொணர பலர் சந்தேகத்துடன் இருந்தபோதும், அவர்கள் பக்தியில் வந்த மலர்களை விட மறுக்காமல் சேகரித்து ஆய்வுகள் நடத்தினர்.
இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் பெயர் Kanpur Flowercycling Pvt. Ltd.. இதன் பயணத்தில், HelpUsGreen என்ற சமூக அமைப்புடன் கூட்டு பணியாற்றி வருகின்றனர். இந்த அமைப்பு, கங்கை ஆற்றை பாதுகாக்கும் நோக்கில், கோவில்களில் இருந்து மலர் கழிவுகளை சேகரித்து சுற்றுச்சூழல் தயாரிப்புகளாக மாற்றுகிறது. இதன்மூலம் கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.
தொடக்கத்திலிருந்து இன்றுவரை Phool.co, உதர பிரதேசத்தில் உள்ள கோவில்களில் இருந்து தினமும் 4 டன் மலர் கழிவுகளை சேகரித்து, 11,000 மெட்ரிக் டன் வரை மறுசுழற்சி செய்துள்ளது. இதன்மூலம் கங்கை நதியின் மாசுபாடு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
இந்த நிறுவனம் இதுவரை நான்கு கட்டங்களில் மொத்தம் $9.4 மில்லியன் முதலீடு பெற்றுள்ளது. இதில் முக்கியமானதாக 2021-ம் ஆண்டு நடிகை அலியா பட் ஒரு பெரிய தொகை முதலீடு செய்தார். முதலீட்டுத் தொகை வெளியிடப்படவில்லை என்றாலும், அவரது ஆதரவு ஊடகங்களில் பெரும் வரவேற்பை பெற்றது.
அத்துடன் TATA Trusts, Balmer Lawrie & Co., IIT Kanpur போன்ற அமைப்புகளும் முதலீட்டாளர்களாக உள்ளனர்.
Phool.co இந்த புனித மலர்களை பல்வேறு பசுமை தயாரிப்புகளாக மாற்றியுள்ளது. அவை என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.
Fleather: மலர்களிலிருந்து தயாரிக்கப்பட்ட வெகன் லெதர்
மலர்களிலிருந்து உருவாக்கப்பட்ட அத்தியாவசிய எண்ணெய்கள்
மெழுகுவர்த்திகள்
Florafoam – ஸ்டைரோஃபோம்-க்கு மாற்றான பசுமை தயாரிப்பு
சருமத்திற்கு பாதுகாப்பான, இயற்கையான குளியல் பவுடர்
தின, பண்டிகை காலங்களுக்கான பசுமை பரிசுப் பெட்டிகள்
Phool.co என்பது வெறும் ஒரு ஸ்டார்ட்அப் அல்ல; இது ஒரு இயக்கம். வழிபாட்டின் புனிதத்தையும், சூழல் சிந்தனையையும் இணைத்து, சமூக நலனையும் முன்னிலைப்படுத்தி ஒரு புதிய பாதையை உருவாக்கி வருகிறது.
இது போன்ற புதிய முயற்சிகள், பாரம்பரியம், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் ஆகியவை எவ்வாறு ஒரே கட்டத்தில் சந்திக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
