டெல்லியின் ப்ரகதி மைதானில் நடைபெற்ற ‘ஸ்டார்ட்-அப் மகாகும்ப்’ நிகழ்ச்சியில், மனோஜ் தனது பயணத்தை பகிர்ந்தார். குருகிராமை சேர்ந்த இவர், டெல்லி போலீசில் பணியாற்றியவர். ஆனால், எப்போதும் தனக்கென ஒரு தொழில் நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற கனவு இருந்தது. அந்த கனவு, உயர் வேக இணைய வசதி இல்லாததால் தாமதமாகி வந்தது.
ஆனால், 5G வந்த பிறகு, அந்த கனவு செயல்பட தொடங்கியது. 2022ஆம் ஆண்டு, அவர் தனது காவல்துறை அதிகாரி வேலையை ராஜினாமா செய்துவிட்டு VR-VFX வீடியோ தொழில்முனைவு திட்டத்தை தொடங்கினார்.
மனோஜின் தொழில், முழுமையான 360-டிகிரி வீடியோ அனுபவங்களை உருவாக்குவது. திருமண விழாக்கள், முக்கிய நிகழ்வுகள், அல்லது சுற்றுலா தளங்கள், இவை அனைத்தையும் நமது கண்களுக்கு முன்னிலையில் உணரச் செய்கிறார்.
இது இன்று திருமணங்கள் மட்டுமல்ல, கல்வி, ஆன்மிக சுற்றுலா போன்ற பல துறைகளிலும் இவரது டெக்னிக் தான் பயன்படுத்தப்படுகிறது. வயதானவர்கள், உடல் நிலைமையால் யாத்திரை செல்ல முடியாதவர்கள், இவருடைய தொழில்நுட்பத்தின் மூலம் VR-VFX வீடியோவில் யாத்திரையை கண்ணில் காண முடிகிறது.
இதுகுறித்து மனோஜ் கூறியபோது, “VFX இந்தியாவில் இன்னும் வளர்ந்து வரும் துறையாக இருக்கிறது. அதற்கான அடித்தள வேலைகள் அதிகம் தேவைப்படுகின்றன.” ஆனாலும், நான் எடுத்த முயற்சிகள் பலரால் பாராட்டப்பட்டு, அரசுப் பரிசுகளும் கிடைத்துள்ளன. குறிப்பாக, ஆன்மிக சுற்றுலா மற்றும் கல்வி துறைகளுக்கு நான் செய்த சேவைகள் பாராட்டை பெற்றுள்ளது,. immersive வீடியோக்கள் மூலம் குழந்தைகள், பாடங்களை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது என்று கூறியுள்ளார்.
காவல்துறாஇ இருந்த நிலையான வேலையை விட்டுவிட்டு, இந்தியாவின் ஸ்டார்ட்-அப் உலகத்தில் வெற்றிகரமான முயற்சியால் உயர்ந்த மனோஜ் லாம்பா, இன்றைய டிஜிட்டல் யுகத்தில் புதுமையும் பொறுமையும் எப்படி வெற்றியை உருவாக்கும் என்பதற்கான சிறந்த உதாரணமாக இருக்கிறார்.