ஆடம்பர கார் முன் செல்ஃபி எடுத்த பலூன் வியாபாரி.. உரிமையாளர் வந்ததும் தலைகீழான விஷயம்.. கலங்க வைத்த வீடியோ..

சமூக வலைதளத்தை பொருத்தவரையில் இங்குள்ள பலருக்கும் சர்ச்சையான சம்பவங்கள் அல்லது பரபரப்பான, அதிர்ச்சியான விஷயங்கள் ஒரு நிகழ்வில் இருந்தால் தான் பெரிதாக அதனை விரும்பி பார்ப்பார்கள். ஆனால் இதையும் தாண்டி சமூக வலைத்தளங்களில் சில…

baloon seller in car viral video

சமூக வலைதளத்தை பொருத்தவரையில் இங்குள்ள பலருக்கும் சர்ச்சையான சம்பவங்கள் அல்லது பரபரப்பான, அதிர்ச்சியான விஷயங்கள் ஒரு நிகழ்வில் இருந்தால் தான் பெரிதாக அதனை விரும்பி பார்ப்பார்கள். ஆனால் இதையும் தாண்டி சமூக வலைத்தளங்களில் சில பாசிட்டிவான வீடியோக்கள் வலம் வருவதை கவனித்திருப்போம்.

இந்த உலகமே நெகட்டிவாக போய்க் கொண்டிருக்கும் காலத்திற்கு மத்தியில் தான் இது போன்ற சில வீடியோக்கள் நக்கு ஒரு சில நிமிடங்கள் ஒருவித நெகிழ்ச்சியும் ஏற்படுத்திக் கடந்து செல்கிறது. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம். இங்கே வறுமை என்ற ஒரு விஷயம் பலரது வாழ்க்கையில் பெரிய துன்பமாக தான் இருந்து வருகிறது.

பணம் பெரிய விஷயம் இல்லை என ஒரு கூட்டம் சொன்னாலும் இன்னொரு பக்கம் அதன் மதிப்பு தெரிந்தவர்கள் அதனை எட்டுவதற்காக மிகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். பணத்தின் பின்னால் வறுமையுடன் ஓடிக் கொண்டிருக்கும் பலருக்கும் வாழ்நாளில் சாதிக்க வேண்டும் என நிறைய விஷயங்கள் இருக்கும். என்றாவது ஒரு நாள் நிச்சயம் ஜெயித்து விடலாம் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், பலூன் வியாபாரி ஒருவர் காருடன் செல்பி எடுக்க அதன் பின்னர் நடத்த சம்பவம், தற்போது பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது. இது தொடர்பான வீடியோவை பிரின்ஸ் வர்மா என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பகிரப்பட்டுள்ளது. தனது குழந்தையை கையில் வைத்துக் கொண்டு பலூன் வியாபாரி ஒருவர் ரோட்டோரமாக அதனை விற்றுக் கொண்டிருக்கிறார்.

அந்த சமயத்தில் சாலை ஓரம் ஒரு ஆடம்பர காரையும் அந்த பலூன் வியாபாரி சாலையோரம் பார்க்க, தனது குழந்தையை வைத்துக் கொண்டே அந்த காருடன் ஒரு செல்பியையும் அவர் எடுக்கிறார். அந்த சமயத்தில் கார் உரிமையாளரும் உடனடியாக அந்த பலூன் வியாபாரியிடம் சென்று இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என கேட்க அவரோ பயந்து கொண்டு அங்கிருந்து ஒதுங்க பார்க்கிறார்.

காரின் உரிமையாளர் புகைப்படம் எடுத்ததை திட்டத் தான் வருகிறார் என்ற பத்தில் பலூன் வியாபாரியும் கிளம்ப நினைக்க அந்த கார் உரிமையாளர் செய்த விஷயம் தான் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது. காருடன் செல்பி எடுத்ததற்கு பதிலாக காரிலேயே கொஞ்ச தூரம் பயணம் மேற்கொள்ளலாம் எனக்கூறி அந்த பலூன் வியாபாரியையும் கார் உரிமையாளர் அழைக்கிறார். முதலில் அவர் காரில் ஏற மறுத்தாலும் பின்னர் தனது குழந்தையுடனும் அந்த காரில் ஏறிக்கொண்டு சிரித்த முகத்துடன் அவர் பயணம் செய்த வீடியோ தான் தற்போது டாப் லிஸ்டில் இருந்து வருகிறது.

அந்தக் காரை ஒரு நாள் வாங்கியே தீர வேண்டும் என்று அந்த நபர் ஆசைப்பட்டிருக்கலாம். நிச்சயம் வருங்காலத்தில் அது நடந்தே தீரும் என்றாலும் தற்போதைய சூழலில் அந்த காரில் பயணித்ததே மிகப்பெரிய பாக்கியமாக தான் பலூன் வியாபாரிக்கு இருந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.