குரங்குக்கு இப்டி ஒரு திறமையா.. மொட்டை மாடியில் பாத்த வேலை.. உலகையே திரும்பி பாக்க வெச்ச வீடியோ..

பொதுவாக மனிதர்கள் அனைவருமே விலங்கான குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியின் காரணமாக தான் தோன்றினார்கள் என ஒரு வாக்கியம் இருந்து வருகிறது. ஒரு பக்கம் இதற்கு பலரும் ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டாலும் இன்னொரு புறம் இது…

Monkey Flying Kite

பொதுவாக மனிதர்கள் அனைவருமே விலங்கான குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியின் காரணமாக தான் தோன்றினார்கள் என ஒரு வாக்கியம் இருந்து வருகிறது. ஒரு பக்கம் இதற்கு பலரும் ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டாலும் இன்னொரு புறம் இது நிச்சயம் உண்மையாக இருக்காது என்றும் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அதே வேளையில் குரங்கு செய்யும் சில நடவடிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்கள் பார்ப்பதற்கு அப்படியே மனிதர்களை பிரதிபலிப்பது போலவும் இருக்கும். அது மட்டும் இல்லாமல் குரங்கு பேசுவதை தவிர மற்ற அனைத்து வேலைகளையும் ஒரு மனிதர் எப்படி செய்வாரோ அப்படியே எடுத்துக் காட்டுவதால் நிச்சயம் குரங்கிலிருந்து கூட மனிதன் தோன்றி இருக்கலாம் என்றும் பலரால் மிக அதிகமாக நம்பப்பட்டு வருகிறது.

நல்லா சர்க்கஸ் பண்றே மேன்..

அப்படி ஒரு சூழலில் தான் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் குரங்கு செய்த விஷயம் அனைவருமே அரண்டு பார்க்க வைத்துள்ளது. இது தொடர்பாக தற்போது வைரலாகி வரும் வீடியோவின் படி இந்த சம்பவம் வாரணாசி அருகே நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. அங்கே ஒரு வீட்டின் மொட்டை மாடியில் நிற்கும் குரங்கு ஒன்று மனிதர்களைப் போலவே பட்டத்தை மிக லாவகமாக பறக்க விட்டு வருவது தொடர்பான வீடியோ தான் தற்போது அனைவரையும் அசந்து போக வைத்துள்ளது.

குரங்கு ஒன்று மிக சர்வ சாதாரணமாக பட்டத்தை கையாண்டு கொண்டு நிற்க அந்த வீடியோவை பதிவு செய்த நபர்கள் கூட குரங்கிற்கு ஆதரவையும் தெரிவிக்கின்றனர். அப்படி தான் பட்டத்தை பறக்க விட வேண்டும் என்றும் குரங்கினை உற்சாகப்படுத்தி குரங்கும் பதிலுக்கு தேர்ந்த ஒருவரை போல பட்டம் விட்டபடி நிற்கிறது.

பட்டையை கிளப்பும் வீடியோ

இந்த வீடியோவை பலரும் உண்மை என ஏற்றுக் கொண்டாலும் இன்னும் சிலர் எடிட்டிங் ஆக கூட இருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர். ஆனால் அதே நேரத்தில் பார்ப்பதற்கு சற்று நிஜம் தான் என்றும் பலர் குறிப்பிடும் சூழலில் இந்தியா என்பது அனைவருக்கும் ஆன நாடு கிடையாது என்றும் குரங்கும் இங்கே பட்டம் விடும் என்பது போன்ற வேடிக்கையான கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களில் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வரும் வேளையில் இந்த குரங்கு பட்டம் விட்டு செய்யும் அட்டகாசமும் பலரது லைக்குகளை அள்ளி வருகிறது.