அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சி அனைத்திலும் அட்லி கலந்துக் கொண்டதற்கான காரணம் இதுதான்…

அருண்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட அட்லி இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தவர். இயக்குனர் ஷங்கர்…

Atlee

அருண்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட அட்லி இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தவர்.

இயக்குனர் ஷங்கர் இயக்கிய பிரம்மாண்ட படங்களான எந்திரன் (2010) மற்றும் நண்பன்( 2012) ஆகிய படங்களுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்தார் அட்லி. ஷங்கர் அவர்களை குருவாக ஏற்று திரையுலக நுணுக்கங்களை கற்றுக் கொண்டார் அட்லி.

2013 ஆம் ஆண்டு ‘ராஜா ராணி’ திரைப்படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அட்லி. இப்படத்தில் ஆர்யா மற்றும் நயன்தாரா நடித்திருந்தனர். இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது.

தொடர்ந்து நடிகர் விஜயை வைத்து தெறி (2016), மெர்சல் (2017), பிகில் (2019) ஆகிய மூன்று வெற்றிப் படங்களை இயக்கி குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனர்களில் ஒருவராக ஆனார் அட்லி. அடுத்ததாக பாலிவுட்டிற்கு சென்ற அட்லி ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ என்ற ப்ளாக்பஸ்டர் படத்தை எடுத்து பான் இந்தியா இயக்குனராக வலம் வருகிறார்.

சமீபத்தில் அம்பானியின் இல்ல திருமண நிகழ்ச்சிகள் அனைத்திலும் அட்லி தனது மனைவியுடன் கலந்துக் கொண்டார். அதை அனைவரும் வியந்தும் பார்த்தனர், சர்ச்சையாகவும் பேசினர். தற்போது அட்லி அம்பானி வீட்டு நிகழ்ச்சி அனைத்திலும் கலந்துக் கொண்டதற்கான காரணம் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், ஆனந்த் அம்பானி திருமணத்திற்காக ஒரு பத்து நிமிட குடும்ப அனிமேட் குறும்படம் ஒன்றை இயக்குனர் அட்லி எடுத்துக் கொடுத்துள்ளாராம். அதனால் தான் அட்லி அனைத்து நிகழ்வுகளிலும் இருந்துள்ளார்.