பொதுவாக, வீடுகள் அனைத்தும் சிமெண்டை கொண்டு கட்டப்படுகின்றன. ஒரு கான்கிரீட் வீட்டை உருவாக்க முக்கியமான பொருட்களில் ஒன்று சிமெண்ட் என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும். ஆனால், பெங்களூரில் உள்ள ஒரு வீடு, எந்தவிதமான சிமெண்டும் பயன்படுத்தாமல் கட்டப்பட்டுள்ளது. முழுவதுமாக கற்களால் உருவாக்கப்பட்ட இந்த வீடு பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், வீட்டின் உரிமையாளர் கூறியபோது “இது தான் உலகின் முதல் சிமெண்ட் இல்லாத கல் வீடு. இந்த வீடு சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மட்டுமல்லாது, 1,000 ஆண்டுகளுக்கும் அதிகமான ஆயுட்காலத்துடன் நிலைத்து நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டமைப்புக்கு சாம்பல் கிரானைட் மற்றும் மணற்கல் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாரம்பரிய இன்டர்லாக்கிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்கள் ஒன்றோடொன்று பொருத்தப்பட்டுள்ளன. இதில் சிமெண்ட் இல்லை, ஒட்டும் பொருட்கள் இல்லை, வெடிப்பு தொழில்நுட்பமும் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ வைரலாகி, அதிகமான லைக்குகள், பார்வைகள் மற்றும் கருத்துக்களை பெற்றுள்ளது. பலரும் இதை பாராட்டினாலும், சிலர் வீடு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.
ஒரு பயனர், “கடுமையான கோடைக்காலத்தில் இது குளிர்ச்சியாக இருக்கும்! மற்றுமொரு அபூர்வமான கண்டுபிடிப்பு!” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர், “அதிர்ச்சி அளிக்கும் புதுமை! இது பழமையான இந்திய கோயில்களை போல 1,000 ஆண்டுகளுக்கும் மேல் நிலைத்து நிற்கும்!” என்று கருத்து தெரிவித்தார்.
ஒரு ஆர்வமுள்ள பார்வையாளர், “பாய், இதை கட்டுவதற்கான செலவை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!” என்று கேள்வி எழுப்பினார்.
மற்றொருவர், “அழகாக இருக்கிறது, ஆனால் இவன் சிமெண்ட் இல்லாமல் எப்படி கிரானைட்/டைல்ஸ் அடுக்கினான்?” என்று கேள்வி எழுப்பினார்.
மற்றொரு பயனர், “வாவ்… இந்த வீட்டில் நுழையும் ஒருவரும் கோயில் உணர்வு பெறுவார்கள் என்று உறுதியாக சொல்லலாம்! முழுவதும் கற்களால் உருவாக்கப்பட்ட இந்த வீடு எதிர்காலத்திற்கான சிறந்த உதாரணம்!” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இன்னொரு பயனர், இனிமேல் சிமெண்ட் ஆலைகளை எல்லாம் இழுத்து மூடுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.
https://www.instagram.com/p/DHchD3lIYgx/