சென்னை: திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜெகன்மோகன் ரெட்டியை டார்க்கெட் செய்யவில்லை என்றும் சந்திரபாபு நாயுடு பாஜகவை தான் டார்க்கெட் செய்துள்ளார் என்று ஆன்மீக பேச்சாளர் சுகி சுவம் தெரிவித்துள்ளார்.
திருப்பதி லட்டில் முந்தைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பகீர் குற்றச்சாட்டை கிளப்பினார். அவர் குற்றச்சாட்டு வெளியிட்ட சில நாளிலேயே மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு, சோயபீன் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்று கலக்கப்பட்டு இருக்கலாம் என்று குஜராத் லேப்பில் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கை என்று கூறப்படும் அறிக்கை ஒன்று சமூக ஊடகங்களில் கசிந்தது.
இது பெரும் சர்ச்சையாக மாறியது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் பாஜக சுப்பிரமணியன் சுவாமி, திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவரான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி சுப்பா ரெட்டி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடவுளை அரசியல் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்.கலப்பட நெய்யில்தான் லட்டுகள் தயாரிக்கப்பட்டன என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவுமே இதுவரை இல்லை. இது பல கோடி பக்தர்களின் உணர்வுப்பூர்வமான விவகாரம். இதில் எல்லாம் அரசியல் செய்யக் கூடாது என சந்திரபாபு நாயுடுவை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்தத. மேலும் இந்த வழக்கில் ஆந்திர மாநில இந்த விவகாரத்தில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்துள்ளது. இந்த விசாரணைக் குழுவே போதுமானதா? வேறு ஒரு விசாரணை தேவையா என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனக்கூறி இந்த வழக்கை அக்டோபர் 3ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தான் திருப்பதி லட்டு விவகாரம் குறித்து ஆன்மிக பேச்சாளர் சுகி சிவம் பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவின் டார்க்கெட் என்பது முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இல்லை. அவர் பாஜகவை தான் டார்க்கெட் செய்துள்ளார் என்று சுகி சிவகம் கூறியுள்ளார். இதுதொடர்பாக சுகி சிவம் வீடியோவில் கூறுகையில், மூத்த அரசியல்வாதி சந்திரபாபு ஒரு விஷயத்தை சொல்வதற்கு முன்பு நன்கு யோசித்திருக்க வேண்டும். மெல்லி நம்பிக்கையின் மீது தான் மக்கள் உயிர் வாழ்கின்றனர். அதனால் கடவுள், மதம் என்ற விஷயத்தில் மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதில் ஓங்கி அடிப்பதற்கு முன்பு அது மக்களுக்கு எவ்வளவு வலிக்கும் என்பதை மூத்த அரசியல்வாதியான சந்திரபாபு நாயுடு சிந்தித்து பார்த்திருக்க வேண்டும். அவர் வெறும் எதிரியை மட்டும் நினைத்தார். அவருக்கு ஜெகன்மோகன் ரெட்டி என்பவர் எதிரி. அவர் மீண்டும் எழுந்து வரக்கூடாது என்பதற்காக இந்த லட்டை ஆரம்பத்தில் கையில் எடுத்திருக்கிறார்.
நாட்டில் பொறுப்புள்ள அரசியல்வாதியாக டந்து கொள்ள வேண்டும். ஆனால் அப்படி நடந்து கொள்வது இல்லை. சந்திரபாபு நாயுடு சரியான படி இந்த விஷயத்தை கையாளவில்லை. இப்போது கூட யாருக்கும் புரியவில்லை. அவருக்கு லட்டு முக்கியமில்லை. அவருக்கு ஜெகன் மோகன் கூட முக்கியமில்லை. சந்திரபாபு நாயுடுவை நன்றாக படித்து ஸ்கேன் செய்து பார்த்தால் ஒன்று மட்டும் புரியும். ஆந்திராவில் பாஜக வளராமல் இருக்க வேண்டும் என்பது தான் சந்திரபாபு நாயுடுவின் ரகசியம். அதாவது பாஜகவுக்கு இந்தியா அளவில் இந்து என்ற மார்க்கெட்டிங் இருக்கு. இப்போது ஆந்திராவில் பாஜக காலை நுழைத்து விட்டால் அங்கு ஆட்சியில் உள்ள தெலுங்கு தேசம் காணாமல் போய்விடும். அவர் (சந்திரபாபு நாயுடு) எவ்வளவு கெட்டிக்காரர்கள் பார்த்தீர்கள் என்றால் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவருக்கு முக்கியவில்லை. ஆந்திராவில் பாஜக வளராமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கான வேலையை தான் ஆரம்பித்து விட வேண்டும் என்று முன்னதாகவே இறங்கிவிட்டார். இதன்மூலமாக ஜெகன்மோகன் ரெட்டியை வீழ்த்தியதை விட பாஜகவை வீழ்த்து தான் அவருடைய ஆழ்மனதில் நோக்கமாகும்
நீங்கள் என்னிடம் கேட்கலாம்.. ஆழ்மனதை கண்டுபிடிக்கும் அளவுக்கு ஸ்கேன் வைத்துள்ளாயா? என்று.. ஆனால் எனக்கு என்று ஒரு அபிப்ராயம். நான் அவரை ஸ்கேன் செய்தேன். என்டி ராமராவுக்கே அவர் டிமிக்கி கொடுத்தவராச்சே. சந்திரபாபு எப்படிப்பட்ட ஆள். அதனால் அவர் தேசிய கட்சியான பாஜகவுக்கு வெடி வைக்கிறார். எப்படி என்றால் ஆந்திராவில் மதத்தை வைத்து பாஜக வளர்ந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. இந்த விஷயத்தில் நாம் முந்தி கொள்ள வேண்டும். ஆந்திராவில் நாம் தான் இந்து மதத்தின் பெரிய பாதுகாவலர் எனும் வேஷத்தை போட வேண்டும் என்று திருப்பதி விஷயத்தில் சந்திரபாபு நாயுடு விளையாடிவிட்டார். இதில் விளையாடவே கூடாது. பக்தர்களுக்கு அசாத்திய கோபம் வரும். இதன் எதிர் விளைவு எப்படி இருக்கும் என்பது அவருக்கு தெரியவில்லை. உண்மையில் எதிர்விளைவு கடுமையாக இருக்கும்.
தற்போதைய குற்றச்சாட்டு நாளைக்கு சந்திரபாபு நாயுடு நிரூபிக்கப்படாவிட்டால் என்ன ஆகும்?. ஒன்று விஞ்ஞானமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மெய்ஞானமாக இருக்க வேண்டும். இன்று பசுவே கலப்படமாக இருக்கிறது. வெளிநாட்டு கலப்புடன் தானே பசுவே வருகிறது. அந்தநெய்யில் விதவிதமான மாட்டு கொழுப்பு இருக்க வாய்ப்பு உள்ளதே.. எங்கேயாவது நாட்டு பசுவில் இருந்து தான் நெய் தயாரிக்கிறார்களா? கிடையாது. அதுவே கலப்பாகிவிட்டது. சர்வதேச அளவில் பார்த்தால் நெய்க்கே Non Vegetarian Status தான் கொடுப்பார்கள். ஏன் என்றால் அது மிருகத்தில் இருந்து வரக்கூடிய ஒன்று. நாம் இயல்பாகவே அதனை பயன்படுத்தி கொண்டு தான் இருக்கிறோம். கொஞ்சம் ஆழமாக யோசித்தால் நாம் அதை பயன்படுத்த கூடாது.
இப்போது சந்திரபாபு நாயுடுவின் நோக்கம் எதிரியை வீழ்த்த வேண்டும். அதைவிட நண்பனை வீழ்த்தணும் என்பது தான். இதில் எதிரியை என்பது ஜெகன் மோகன் ரெட்டி தான். நண்பன் என்பது பாஜகவை வீழ்த்துவது. சந்திரபாபு நாயுடு இதில் வல்லமையான ஆள். இது தான் என் கருத்து. ஒரு கூட்டணி என்றாலே Innner Rivarely இருக்கத்தான் செய்யும். எனவே இப்போது வெளிப்படையாக பார்த்தால் தான் சந்திரபாபுவுக்கு வேறு ஒரு கட்சி எதிரியாக உள்ளத. அதேவேளையில் ஆந்திராவை முழுமையாக சந்திரபாபு நாயடு தனது கட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும் பவன் கல்யாண் அவருக்கு கீழ் இருக்க வேண்டும். பவன் கல்யாண் ஆந்திராவில் செல்வாக்கு பெற வேண்டும் என்றால் சந்திரபாபு நாயுடுவை தனக்கு கீழ் கொண்டு வர வேண்டும். இது எல்லாம் கூட்டணி உள்விவகாரம் சார்ந்த அரசியல் ஆகும்.
இதனால் ரொம்ப பக்திமானாக சந்திரபாபு காட்ட. அவரை விட தான் தான் பக்திமான் என்று பவன் கல்யாண் காட்ட.. பெருமாள் தான் பார்த்து யப்பா இப்படி பொய் சொல்கிறீர்களே என்று புத்தி கொடுத்தால் தான் மாற வேண்டும். என்னுடைய கவலை என்பது எதுவென்றால்.. மதம் என்பது ரொம்ப சென்சிட்டவான விஷயம். இந்த நாடு விடுதலை பெற்றபிறகு எவ்வளவு ரத்த களரியை பார்த்தது. இந்த நாடு விடுதலை பெற்ற பிறகு வளர வேண்டிய வளர்ச்சியை இன்னும் ஏன் எட்டவில்லை என்று தெரிகிறதா? இந்த நாடு அத்தகைய வளர்ச்சியை எட்டாமல் இருப்பதற்கு காரணமே மதப்பிரச்சனை தான் முக்கிய காரணம் ஆகும். அதனை தீர்க்க வேண்டும் என்று நாம் யோசிக்க வேண்டும். மதம் எனும் சிக்கலில் இருந்து இந்தியாவை வெளிக்கொண்டு வருவது பற்றி யோசிக்க வேண்டும்” இவ்வாறு சுகி சிவம் கூறினார்.