ராஜ்யசபா உறுப்பினர்கள் தற்போது அவர்களின் தொழில்நுட்ப கருவிகளுக்கு மேம்படுத்தலாக ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் ப்ரொஜெக்டர், தொழில்நுட்ப சாதனங்கள் போன்ற நவீன உபகரணங்களை பெறவுள்ளனர். இந்த திட்டம் ‘ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான கணினி உபகரண நிதி உரிமை திட்டம்’ எனும் மறுசீரமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் அமல்படுத்தப்படுகிறது. இதன் நோக்கம், உறுப்பினர்கள் சட்டப்பணிகளில் சிறப்பாக செயல்பட நவீன தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதாகும்.
இந்த முயற்சி, 2008 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட “ராஜ்யசபா உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுக்கான கணினி உபகரண வழங்கல் விதிமுறைகள்” என்பதன் கீழ் செயல்படுகிறது. மே 23 அன்று நடைபெற்ற கூட்டத்தில், இந்த திட்டத்தின் பரப்பளவை விரிவாக்கம் செய்வது குறித்து தீர்மானிக்கப்பட்டது.
3 ஆண்டுகள் மேல் பதவியில் உள்ளவர்கள்: ₹2,00,000 வரை பெற முடியும்.
3 ஆண்டுகள் அல்லது அதற்கு குறைவான காலம் இருந்தால்: ₹1,50,000 வரை.
3 ஆண்டுகள் கடந்த பிறகு, குறைந்தது 6 மாதங்கள் பதவிக்காலம் இருந்தால், கூடுதலாக ₹1,00,000 வழங்கப்படும்.
பொருட்களை வாங்கியதற்கான அசல் பில்ல்கள் வழங்கப்பட வேண்டும்.
தற்போது, ராஜ்ய சபா உறுப்பினர்கள் பெறும் உபகரணங்கள் என்னென்ன?
டெஸ்க்டாப் மற்றும் லாப்டாப்
பென் டிரைவ், ப்ரிண்டர், ஸ்கேனர்
UPS, ஸ்மார்ட் போன்
இவை ஆராய்ச்சி, தகவல்தொடர்பு மற்றும் நிர்வாக பணிகளுக்காக உதவுகின்றன.
இனி புதிதாக சேர்க்கப்பட்டவை:
ஸ்மார்ட் டிவி மற்றும் ஸ்மார்ட் டிஸ்ப்ளே
ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்கள், போர்டபிள் ஸ்க்ரீன்கள்
கீபோர்டுடன் கூடிய டேப்லெட்
ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்ற அணிகலன் சாதனங்கள்
ஆன்டிவைரஸ்
ஸ்பீக்கர்கள், ஹெட்ஃபோன்கள், மைக்ரோஃபோன்கள்
வெப்காம், புளூடூத் ஹெட்ஃசெட், ஏர்பாட்கள்
இந்த உபகரணங்களின் பயன்பாடு, உறுப்பினர்கள் சட்டமன்றம், குழு கூட்டங்கள் மற்றும் தொகுதி பணிகளில் தொழில்நுட்ப ரீதியாக முன்னேற உதவுவதாகும். ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் உள்ளிட்டவை, அவர்களின் செயல்திறன் மற்றும் போக்குவரத்து தேவைகளுக்கு உதவுகின்றன.
ஒவ்வொரு செலவிற்கும் அசல் பில்கள் கட்டாயமாகவே வழங்கப்பட வேண்டும் என்பது முக்கிய விதியாக உள்ளது.
இந்த முயற்சி, இந்திய நாடாளுமன்றத்தில் டிஜிட்டல் மாற்றத்தை நோக்கி எடுத்துள்ள ஒரு முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது. தற்போது, ராஜ்யசபா உறுப்பினர்கள் தங்கள் வேலையில் தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தக்கூடிய நிலைக்கு வருவார்கள்.
தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா செல்லக்கூடிய கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கும் இந்த பொருட்கள் இலவசமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

