இந்தியாவில் இருக்கும் நபர்களுக்கு எப்படி வெளிநாடுகளுக்கு சென்று பயணம் செய்ய வேண்டும் என்று விருப்பம் இருக்குமோ அதே போல மற்ற நாடுகளில் இருந்தும் இந்தியாவில் நிறைய இடங்களை சுற்றி பார்க்க வேண்டும் என்ற கனவு பலருக்கும் இருக்கும். இதற்கு மிக முக்கிய காரணம் மற்ற நாடுகளைப் போல இல்லாமல் நிறைய விஷயங்களில் இந்தியா முன்னேறி உள்ளதுடன் மட்டுமில்லாமல், வரலாற்று சிறப்புமிக்க பல இடங்களும் இங்கே இருப்பது தான்.
இதனால் நாம் விடுமுறை காலங்களில் இந்தியாவில் இருக்கும் பல சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் போது நிறைய வெளிநாட்டு மக்களை நாம் கவனித்திருப்போம். அந்த அளவுக்கு இந்தியாவில் உள்ள நிறைய இடங்களை பலருக்கும் சுற்றி பார்க்க வேண்டும் என்று விருப்பம் இருக்கும் அதே வேளையில் வெளிநாட்டு பயணிகளுக்கு எதிரான சம்பவங்களும் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
தற்போது நிறைய வெளிநாட்டவர்கள் இந்தியா வரும்போது அந்த பயணம் தொடர்பாக வீடியோ வெளியிடும் நிலையில் அதில் அவர்களுக்கு சில கசப்பான அனுபவங்களும் நடைபெறாமல் இல்லை. அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் சிங்கப்பூரிலிருந்து வந்த Vlogger ஒருவர் அவருக்கு இந்தியாவில் நடந்த கசப்பான அனுபவம் பற்றி பகிர்ந்த வீடியோ தற்போது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து Chan Sylvia என்ற பெண் ஒருவர் சமீபத்தில் இந்தியாவிற்கு வந்துள்ளார். அப்போது இந்தியாவில் சுற்றிப் பார்ப்பதற்கு அருமையான இடங்கள் என்ன என்று அவர் குறிப்பிட்டிருக்கும் அதே வேளையில், டெல்லியில் நாம் தவிர்க்க வேண்டிய விஷயம் என்ன என்பதை பற்றி ஒரு கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள கருத்தின் படி, இரவு நேரத்தில் டெல்லியில் தயவு செய்து இங்கே டாக்ஸி புக் செய்ய வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவருக்கு நடந்த அனுபவம் பற்றி பேசும் செல்வியா, இரவு நேரத்தில் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தவருக்கு Uber கேப் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் டாக்ஸி ஒன்றில் ஏறி உள்ளனர். அந்த நபரோ 200 ரூபாய் அதிகமாக கேட்டு தவறான லொகேஷனிலும் செல்வியாவை இறக்கி விட்டுள்ளார்.
அதேபோல மற்றொரு அனுபவமாக டெல்லியில் வேறு சில இடங்களை சுற்றி பார்த்தபோது 6 ஆயிரம் ரூபாய் ரிக்ஷாவிற்காக வசூல் செய்ததும் அவரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. டாக்சியை விட அதிக தொகையை ரிக்ஷா ஓட்டுநர் வாங்க, முதலிலேயே பணம் கொடுத்து விட்டு இங்கே பயணம் செய்வது தான் சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
அதேபோல இங்கே வரும் வெளிநாட்டு பயணிகள் நிச்சயம் எப்போதும் கையில் பணத்தை வைத்திருக்க வேண்டும் என்றும் இங்கே கிரெடிட் கார்டு அம்சங்கள் நிறைய தெருக்களில் குறைவாக பயன்படுத்தப்படுவதாகவும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆலோசனை கொடுத்துள்ளார்.
இந்தியாவின் தலைநகரமான டெல்லிக்கு வந்த வெளிநாட்டு பயணிக்கு நேர்ந்த நிலை பற்றி தற்போது இந்தியர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.