பிரபல சீரியல் நடிகை உள்பட நான்கு நடிகைகள் விபச்சாரத்தில் தள்ளப்பட்டிருந்த நிலையில், அவர்களை மீட்ட போலீசார், இரண்டு விபச்சார புரோக்கர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சில பெண்கள் வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் தள்ளப்பட்டுள்ளதாக மும்பை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, அந்த ஹோட்டலை மாறுவேடத்தில் கண்காணித்த போலீசார், அங்கு வரும் ஒவ்வொருவரையும் ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது, ஷ்யாம் சுந்தர் அரோகரா என்பவர் விபச்சார புரோக்கர் என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், போலீசார் ஹோட்டலில் நுழைந்து குறிப்பிட்ட அறைகளில் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில், அங்கு நான்கு நடிகைகள் இருப்பதை கண்டுபிடித்து, அவர்களை மீட்டனர். இவர்களில் ஒருவர், ஒரு பிரபல இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கும் நடிகை ஆவார். மற்ற நடிகைகளும் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் என்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து, ஷ்யாம் சுந்தர் மற்றும் இன்னொரு புரோக்கரை கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரம் குறித்து கூடுதல் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பையின் முக்கிய பகுதியில் நான்கு நடிகைகளை விபச்சாரத்தில் தள்ளிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.