பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை, திருட்டு உட்பட முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை மிளகாய் பொடி ஸ்ப்ரே பயன்படுத்தி கட்டுப்படுத்தி, கைது செய்வதே இந்த படையின் முக்கிய பணி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், ரயிலில் பெண்கள் இனி பாதுகாப்புடன் பயணம் செய்யலாம். மேலும், இந்த படையினர் அவ்வப்போது ரயில்களில் பயணம் செய்து, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி ஒரு பாதுகாப்புப் படை உள்ளது என்பதே முறைகேடு செய்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். இது இந்திய ரயில்வேயின் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. எனவே, இனி பெண்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ பயணிக்கும்போது, பாதுகாப்பாகச் செல்ல இந்த நடவடிக்கை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.