பணக்காரர் பட்டியலில் திடீரென 4வது இடத்தை பிடித்துவிட்ட சிவ நாடார் மகள் ரோஷ்னி மல்ஹோத்திரா.. எப்படி தெரியுமா?

  HCL குழும நிறுவனர் சிவ நாடார், தனது 47% பங்குகளை மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்திராவிற்கு பரிசாக வழங்கியதாக செய்தி வெளியாகியுள்ளது. HCL குழுமத்தின் முதன்மை நிறுவனங்களான HCL Corp மற்றும் Vama…

roshini nadar

 

HCL குழும நிறுவனர் சிவ நாடார், தனது 47% பங்குகளை மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்திராவிற்கு பரிசாக வழங்கியதாக செய்தி வெளியாகியுள்ளது.

HCL குழுமத்தின் முதன்மை நிறுவனங்களான HCL Corp மற்றும் Vama Delhi நிறுவனங்களில் சிவ நாடார் தனது 47% பங்குகளை மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்திராவிற்கு பரிசாக வழங்கியுள்ளார்.

இந்த பங்குப் பரிமாற்றம் காரணமாக ரோஷ்னி நாடார் மல்ஹோத்திரா, HCL Infosystems மற்றும் HCL Technologies நிறுவனங்களின் மிகப்பெரிய பங்குதாரராக மாறுகிறார். மேலும் அவர் இந்தியாவின் நான்காவது செல்வந்தராக ரோஷ்னி நாடார் மல்ஹோத்திரா மாறிவிட்டார். முதல் மூன்று இடத்தில் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, சாவித்ரி ஜிந்தால் & குழுமம் இருக்கும் நிலையில் ரோஷினிக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

இந்த பரிமாற்றம், HCL குழுமத்தின் எதிர்கால வளர்ச்சியில் குடும்பத்தின் தலைமையினை உறுதிசெய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பரிசுகள் வழங்கப்பட்டதாக பங்கு சந்தை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை அடுத்து செபியும் இந்த தகவலை உறுதி செய்துள்ளது.