கர்நாடகா உள்துறை ஐஜி ரூபா ஐபிஎஸ்க்கு எதிராக ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ் அதிரடி வழக்கு

பெங்களூர்: கர்நாடக உள்துறை பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி வருபவர் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா. அதேபோல ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரோகிணி சிந்தூரி ஆகியோரிடையே கடந்த ஆண்டு கருத்துமோதல் ஏற்பட்டது. இந்நிலையில் ஐ.ஏ.எஸ்.…

Rohini Sindhuri IAS files case against Karnataka Home IG Rupa IPS

பெங்களூர்: கர்நாடக உள்துறை பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி வருபவர் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா. அதேபோல ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரோகிணி சிந்தூரி ஆகியோரிடையே கடந்த ஆண்டு கருத்துமோதல் ஏற்பட்டது. இந்நிலையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி மீது பெங்களூர் நீதிமன்றத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மானநஷ்ட வழக்கை தொடர்ந்தார்.

கர்நாடக உள்துறை பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி வருபவர் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி ஆகியோர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை இருவரும், சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்துகொண்டனர். ரோகிணி சிந்தூரியின் தனிப்பட்ட புகைப்படங்களை ரூபா சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் ரூபா, ரோகிணி சிந்தூரி இடையே சமூக வலைதளங்களில் கருத்து மோதலும் ஏற்பட்டது. இதனால் அவர்களை கர்நாடக அரசு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, பின்னர் பணி ஒதுக்கியது.

இந்த நிலையில் தன்னை பற்றி அவதூறு பரப்புவதாக ரூபா மீது கடந்த 2023-ம் ஆண்டு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ரோகிணி சிந்தூரி மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யும்படி ரூபா தரப்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து ரூபா, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. அப்போது நீதிபதி 2 பேரையும் சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அதற்கு அவர்கள் உடன்படவில்லை. இதையடுத்து கீழ் கோர்ட்டில் உங்கள் பிரச்சினைகளை தீர்த்து கொள்ளுங்கள் என்று நீதிபதி இருவருக்கும் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் நேற்று ரூபா தரப்பில் பெங்களூரு 7-வது கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ரோகிணி சிந்தூரி மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், கடந்த 2023-ம் ஆண்டு ரோகிணி சிந்தூரி சமூக வலைதளங்களில் எனக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட்டுள்ளார். இதனால் நான் மற்றும் எனது குடும்பத்தினா் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறோம். எனவே இதுதொடர்பாக ரோகிணி சிந்தூரி மீது கிரிமினல் மற்றும் மானநஷ்ட வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார் அந்த மனுவை ஏற்று விசாரணை நடத்திய நீதிபதி, இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி ரோகிணி சிந்தூரிக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டிருக்கிறார். இதனால் ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரிகள் இடையேயான மோதல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருப்பது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.