தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு மருத்துவர்கள் கடந்த வாரம் ரோபோ உதவியுடன் செய்யப்பட்ட ரெட்ரோபெரிடோனியல் பகுதி நேப்ரெக்டமி செயலை மேற்கொண்டனர். இந்த அறுவை சிகிச்சை மிகவும் சிறப்பாக நடந்தது என்றும் நோயாளிக்கு எந்தவித சிரமமும் இன்றி உடலில் உள்ள மற்ற பகுதிகளுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி வெற்றிகரமாக நடந்தது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
45 வயது பெண்மணி ஒருவருக்கு உடலின் வலது பக்கத்தில் வலி, தொடர்ந்து சோர்வு மற்றும் பலவீனத்துடன் இருந்த நிலையில் அவருக்கு கல்லீரல் நோய் மற்றும் சிறுநீரகத்தின் மீது ஒரு புற்றுநோய் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது அவருடைய சிறுநீரக செயல்பாட்டை பாதிப்பதாக இருந்தது.
கிட்னியில் உள்ள புற்றுநோய், சிறுநீரகத்தின் முக்கிய உடல் அமைப்புகளை அழிக்கும் ஆபத்து உள்ளது என்பதை அறிந்தவுடன் மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். மேலும் இந்த அறுவை சிகிச்சை ரோபோவின் உதவியால் செய்ய முடிவு செய்யப்பட்டது.
ரோபோவின் அறுவை சிகிச்சை கல்லீரல் பாதிக்காமல் புற்றுநோயை ஏற்படுத்தும் பகுதி மட்டும் எளிதாக அகற்ற முடிந்தது. இந்த அறுவை சிகிச்சையின் மூலம் நோயாளி குறைந்த வலியுடன் 48 மணி நேரத்திற்குள் வீடு திரும்பினார். இது மிக கஷ்டமான கல்லீரல் நோயாளிகளுக்கான சிகிச்சை என்றாலும் ரோபோ மூலம் மிக எளிதாக செய்யப்பட்டதால் இது ஒரு அரிய வெற்றி என கூறப்படுகிறது.