பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா எப்போது, எப்படி பதிலடி கொடுக்கலாம் என்ற முழு சுதந்திரத்தை இந்திய ராணுவத்துக்கு வழங்கியதாக அறிவித்த சிலமணி நேரத்தில் பாகிஸ்தான் அமைச்சர் தரார் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தரார் மேலும் கூறியபோது, ‘பஹல்காம் தாக்குதலுடன் பாகிஸ்தானுக்கு தொடர்பு என்ற தவறான மற்றும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் பெயரில் இந்திய ராணுவம் தாக்க தயாராகியுள்ளது. ஆனால் பாகிஸ்தானும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு. அதன் வலியை நாங்களும் உணர்கிறோம். உலகத்தின் எங்கு நடந்தாலும், எந்த வடிவிலும் பயங்கரவாதத்துக்கு எதிராகவே நாங்கள் இருந்திருக்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.
மேலும் அவர் கூறியது: “இந்தியா நீதிபதியாகவும், தண்டனை வழங்குபவராகவும் மாறி தானே போர் முடிவை எடுத்துள்ளது. பாகிஸ்தான் ஒரு பொறுப்பான நாடாக இருந்து, உண்மை கண்டறிய ஒரு நிபுணர்கள் குழுவின் விசாரணை திறந்த மனதுடன் முன்மொழிந்தது.”
இந்திய ராணுவம் மேற்கொள்ளும் இப்படியான அவசரமான நடவடிக்கைகளுக்கு தக்க பதில் கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை செய்தார். போர் பதற்றத்தை அதிகரிக்கும் எந்த முடிவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய நிலை இந்தியா மீதுதான் இருக்கும் என்பதை உலக நாடுகள் உணர வேண்டும்,” என்றார்.
பாகிஸ்தான் அமைச்சர் தரார் பேச்சுக்கு இந்திய தரப்பில் என்ன பதிலடி கொடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.