லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே, ‘பஹல்காம்’ பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக, ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபோது, பாகிஸ்தான் இராணுவத்தின் கர்னல் தைமூர் ரஹத் திடீரென பாகிஸ்தான் தூதரகத்தின் மாடியில் இருந்து தோன்றினார். மேலும் கையில் அபிநந்தன் வர்த்தமானின் புகைப்படமும் இருந்தது.
இந்திய விமானப்படை குழுத் தலைவர் அபிநந்தன் வர்த்தமானின் புகைப்படத்தை கையில் பிடித்தபடி இருந்த பாகிஸ்தான் இராணுவத்தின் கர்னல் தைமூர் ரஹத் ஒரு கட்டத்தை அவரது கழுத்தை வெட்டுவோம் என்று சைகையில் காண்பித்தார். இது அவரது வெறுப்புணர்வை காட்டுவதாக கடுமையாம விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் இராணுவத்தின் கர்னல் தைமூர் ரஹத்தின் இந்த நடவடிக்கை, இந்திய வம்சாவளியினரை அச்சுறுத்தும் விதமாகவும், வெறுப்பூட்டும் வகையிலான தைரியமற்ற செயலாகவும் பார்க்கப்பட்டது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காமில் நடந்த தாக்குதலில் 28 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த கொடூரச் சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்த, இந்தியா மற்றும் உலகத் தலைவர்கள் கடுமையான கண்டனங்களை வெளியிட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பின் இந்தியா எடுத்த கடுமையான நடவடிக்கைகளால் பாகிஸ்தான் பொருளதாரமே ஆட்டம் கண்டுள்ளது.
https://x.com/TajinderSTS/status/1915960583285051810