முகேஷ் அம்பானிக்கு குறி வைக்கிறாரா ஆசிப் முனீர்? வெறும் 420 கிமீ தான்.. தாவூத் இப்ராஹின் உதவியுடன் தாக்குதல் நடத்த திட்டமா?

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர், இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியை அச்சுறுத்தியதாக கூறப்படும் சமீபத்திய சம்பவம், இந்திய பாதுகாப்புத் துறையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. புளோரிடாவில் நடந்த இரவு விருந்தொன்றில், முனீர் பல…

ambani munir

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர், இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியை அச்சுறுத்தியதாக கூறப்படும் சமீபத்திய சம்பவம், இந்திய பாதுகாப்புத் துறையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடாவில் நடந்த இரவு விருந்தொன்றில், முனீர் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகவும், குறிப்பாக அம்பானியை பற்றி குர்ஆனில் உள்ள ‘சூரா ஃபில்’ என்ற வசனத்தை மேற்கோள் காட்டி பேசியதாகவும் அடுத்த முறை நாங்கள் என்ன செய்வோம் என்பதை காட்டுவதற்காகவே இது செய்யப்பட்டது” என்று அவர் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாவூத் இப்ராஹிம்-ஐ.எஸ்.ஐ. தொடர்பு: அச்சுறுத்தலின் மூல காரணம்

முனீருக்கு அம்பானியை நேரடியாக குறிவைக்க முடியும் என்ற நம்பிக்கை எங்கிருந்து வந்தது என்பது உளவுத்துறை வட்டாரங்களில் முக்கியமான கேள்வியாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியும், நிழல் உலக தாதாவுமான தாவூத் இப்ராஹிமுக்கும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறைக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்புதான் என்று நம்பப்படுகிறது.

தாவூத்தின் புதிய பதவி:

2023 அக்டோபரில், கராச்சியில் வசிக்கும் தாவூத் இப்ராஹிம், ஐ.எஸ்.ஐ-யின் கூடுதல் இயக்குநராக கௌரவ அடிப்படையில் நியமிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இந்த பதவி, பாகிஸ்தானின் உளவு மற்றும் பாதுகாப்பு துறைகளில் தாவூத்தின் செல்வாக்கையும், பங்கையும் தெளிவாக காட்டுகிறது.

தாவூத் இப்ராஹிமுக்கு மும்பை, அகமதாபாத் மற்றும் குஜராத் கடற்கரை பகுதிகளில் இன்னும் வலுவான வலையமைப்பு உள்ளது. இந்த வலையமைப்பை ஐ.எஸ்.ஐ. ஒரு போர்ச் சூழலில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று உளவுத்துறை வட்டாரங்கள் கருதுகின்றன.

ஜாம்நகரில் உள்ள அம்பானியின் சுத்திகரிப்பு ஆலை, $120 பில்லியன் மதிப்பு கொண்டது. இது நாளொன்றுக்கு 1.25 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. இங்கு ரஷ்ய கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய எண்ணெயை வாங்குவதை கைவிடுமாறு இந்தியாவை வெளிப்படையாக எச்சரித்திருந்த நிலையில், இந்த ஆலை முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த சுத்திகரிப்பு ஆலை பாகிஸ்தான் எல்லையில் இருந்து வெறும் 407 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது பாதுகாப்பு ரீதியாக ஒரு பெரிய அச்சுறுத்தலாகும். இதனால், அருகில் உள்ள தீசா என்ற இடத்தில் ஒரு விமானப்படைத் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

அம்பானியின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால சவால்கள்

2021-ல், தாவூத் இப்ராஹிமின் டி-கம்பெனியுடன் தொடர்புடைய சிலர் அம்பானியின் ஆடம்பர இல்லமான அண்டிலியாவை குறிவைக்க திட்டமிட்டனர். அந்த திட்டம் முறியடிக்கப்பட்ட பிறகு, அம்பானியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதாரத்தை அச்சுறுத்த, முகேஷ் அம்பானிக்கு ஒரு பெரிய நெருக்கடி கொடுக்க, ஆசிப் முனீர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுவது. இது இந்திய தொழிலதிபர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது