அதை உடனே மோசடிக்காரர் அழைப்பாக பூபேந்திரா புரிந்துகொண்டார். ஆனால் வெளிக்காட்டி கொள்ளாமல் “தயவுசெய்து அந்த வீடியோவை வெளியிடாதே. குறிப்பாக என் அம்மாவிடம் சொல்லிவிடாதே. எனக்கு பெரிய சிக்கல் ஆகிவிடும்” என்று நடித்து பேசினார். இதைக் கேட்ட மோசடிக்காரர், “16,000 ரூபாய் கொடுத்தால் இந்த வழக்கை முடித்துவிடுகிறேன்” என்று கூறினார்.
இதனால், பூபேந்திரா தான் ஒரு திட்டம் போட்டார். “என் அம்மாவின் தங்கச் சங்கிலி அடகில் இருக்கிறது. அதை மீட்டெடுக்க 3,000 ரூபாய் தேவை. நீ 3,000 ரூபாய் அனுப்பினால், நான் தங்கச் சங்கிலியை மீட்டு, முழு தொகையையும் தருகிறேன்” என்று கூறினார்.
இதனை நம்பி மோசடிக்காரன், பூபேந்திராவின் கணக்குக்கு ₹3,000 அனுப்பினான். சில நிமிடங்கள் கழித்து, பூபேந்திரா மீண்டும் பேசினார். “3,000 மட்டும் போதாது. அடகு கடைக்காரர் இன்னும் ₹4,480 வேண்டும் எனக் கூறுகிறார். இந்த தங்கச் சங்கிலியின் மதிப்பு ₹50,000. எனவே, ₹4,480 அனுப்பினால் முழு பணத்தையும் அனுப்பி விடுகிறேன்” என்று கூறினார்.
இதையும் நம்பி, மோசடிக்காரன் மேலும் ₹4,480 அனுப்பினார். ஆனால், அதற்குப் பிறகு பூபேந்திரா எந்த பதிலும் அளிக்கவில்லை. மோசடிக்காரர் பின்னர் பூபேந்திராவை தொடர்பு கொண்டு, “தயவுசெய்து என்னுடைய பணத்தை திருப்பிக் கொடுத்து விடு” என்று கதறினார்.
இதைத் தொடர்ந்து, பூபேந்திரா நேராக போலீசில் புகார் அளித்து, மோசடியாளரிடம் இருந்த பெற்ற பணத்தையும் போலீஸிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.