இனி பணத்தை GPayல் அனுப்பி கொள்ளுங்கள்.. NEFT, RTGS, IMPS கட்டணங்களை கிடுகிடுவென உயர்த்திய வங்கி.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!

HDFC வங்கி, அதன் சேமிப்பு, சம்பளம் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கணக்குகள் தொடர்பான சில சேவை கட்டணங்களில் விரிவான மாற்றங்களை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் வங்கி, பண பரிவர்த்தனை வரம்புகளையும் குறைத்துள்ளது, இலவச…

neft

HDFC வங்கி, அதன் சேமிப்பு, சம்பளம் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கணக்குகள் தொடர்பான சில சேவை கட்டணங்களில் விரிவான மாற்றங்களை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் வங்கி, பண பரிவர்த்தனை வரம்புகளையும் குறைத்துள்ளது, இலவச காசோலை தாள்களின் எண்ணிக்கையையும் குறைத்துள்ளது. மேலும் NEFT, RTGS, IMPS கட்டணங்களை மாற்றியமைத்துள்ளது. இதனால் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இலவச மாதாந்திர பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை HDFC வங்கி குறைத்துள்ளது. முன்பு, ஒரு கணக்கிற்கு மாதத்திற்கு ரூ.2 லட்சம் வரை இலவச வரம்பு இருந்தது, அது இப்போது ரூ.1 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாதத்திற்கு நான்கு இலவச பரிவர்த்தனைகள் தொடரும். அதற்கு பிறகு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும்.

முன்பு, ஒரு வருடத்திற்கு 25 இலவச காசோலை தாள்கள் வழங்கப்பட்டன. ஆனால், இனிமேல் ஒரு வருடத்திற்கு 10 தாள்கள் கொண்ட ஒரு காசோலை புத்தகம் மட்டுமே இலவசமாக வழங்கப்படும். கூடுதல் காசோலை புத்தகங்களுக்கு, ஒரு தாளுக்கு ரூ.4 கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது, 10 தாள்கள் கொண்ட கூடுதல் புத்தகத்திற்கு சாதாரண வாடிக்கையாளர்களுக்கு ரூ.40 மற்றும் மூத்த குடிமக்களுக்கு ரூ.36 கட்டணம் வசூலிக்கப்படும்.

NEFT கட்டணங்கள் முன்பு, ரூ.1 லட்சம் வரையிலான தொகைகளுக்கு ரூ.2 மற்றும் ரூ.1 லட்சத்திற்கு மேல் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இப்போது, நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, கட்டணங்கள் உயர்ந்துள்ளன. உதாரணமாக, ரூ.10,000 வரை ரூ.2, ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை ரூ.4, ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை ரூ.14 என அதிகரித்துள்ளது.

RTGS கட்டணங்கள் முன்பு, ரூ.2 லட்சத்திற்கு மேல் ஒரே ஒரு பிரிவு மட்டுமே இருந்தது. இப்போது, ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ரூ.20 மற்றும் ரூ.5 லட்சத்திற்கு மேல் ரூ.45 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

IMPS கட்டணங்கள் ரூ.1,000 வரையிலான தொகைக்கு கட்டணம் ரூ.3.50-லிருந்து ரூ.2.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.1,000 முதல் ரூ.1 லட்சம் வரையிலான தொகைக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணம் ரூ.3-லிருந்து ரூ.4.50 ஆக அதிகரித்துள்ளது. ரூ.1 லட்சத்திற்கு மேல், மூத்த குடிமக்களுக்கான கட்டணம் ரூ.10-லிருந்து ரூ.13.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

காசோலை திரும்பும் கட்டணங்கள்: ஒரு காசோலை திரும்புவதற்கான கட்டணம் ரூ.500 ஆகவும், இரண்டாவது முறையாக ரூ.550 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு மூன்று பிரிவுகள் இருந்த நிலையில், இப்போது இரண்டு பிரிவுகள் மட்டுமே உள்ளன.

மேற்கண்ட கட்டண மாற்றங்கள் இந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் ஒரு அதிர்ச்சியாகத்தன இருக்கும்,