இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த பெண் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ஏமாந்துள்ளார். அவரை சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து அழைத்த மோசடியாளர்கள், “உங்கள் ஆதார் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளது. இதில் உங்கள் மகளின் பெயரும் தொடர்பு கொண்டுள்ளது. அதனால், அவரையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்படும். நீங்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என்று மிரட்டியுள்ளனர்.
அந்த பெண் தன்னை தனிப்பட்ட முறையில் மிரட்டியது மட்டுமல்லாமல், அவரது மகளின் வாழ்க்கையும் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறி பயமுறுத்தியதால், அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். மூன்று நாட்களுக்கு “நீங்கள் டிஜிட்டல் அரெஸ்ட்டில் இருக்க வேண்டும். நாங்கள் கூறியதை மட்டும் செய்ய வேண்டும்.” என்று கட்டாயப்படுத்தி உள்ளனர்.
அத்துடன், “உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை பாதுகாப்பிற்காக மற்றொரு வங்கி கணக்கிற்கு மாற்ற வேண்டும். பிரச்சனை முடிந்ததும், மீண்டும் உங்கள் கணக்கிலே பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.” என்று கூறி, அவரை யோசிக்கக்கூட விடாமல் அவசரப்படுத்தியுள்ளனர்.
இதனால், அந்த பெண் தனது வங்கி கணக்கில் இருந்த 20 கோடி ரூபாயை மோசடிக்காரர்கள் கூறிய கணக்குக்கு மாற்றிவிட்டார். பணம் மாற்றிய பிறகே அவர் மோசடியில் சிக்கி ஏமாந்துவிட்டதை உணர்ந்தார். பின்னர், காவல்துறையில் புகார் அளித்தார்.
தற்போது, காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் “டிஜிட்டல் அரெஸ்ட்” என்ற சட்ட அம்சமே இல்லை என்பதால், யாராவது “டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறினால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.