திருமணம் செய்தால் வாழ்க்கையே கெட்டு போகும்.. இளம்பெண்ணின் வீடியோ வைரல்..!

இந்தியாவை பொருத்தவரை திருமணம் போன்ற முக்கியமான வாழ்க்கை முடிவுகள், சமுதாயம் மற்றும் குடும்பத்தினரால் நிர்ணயிக்கப்படும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த டிஜிட்டல் யுகத்தில், சில வீடியோக்கள் நம்மை ஆழமாக யோசிக்க வைக்கும்…

marriage 1
இந்தியாவை பொருத்தவரை திருமணம் போன்ற முக்கியமான வாழ்க்கை முடிவுகள், சமுதாயம் மற்றும் குடும்பத்தினரால் நிர்ணயிக்கப்படும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த டிஜிட்டல் யுகத்தில், சில வீடியோக்கள் நம்மை ஆழமாக யோசிக்க வைக்கும் வகையில் கவனத்தை ஈர்க்கிறது. இப்போது திருமணம் குறித்த ஒரு வைரலாகும் ஒரு வீடியோவும் அப்படித்தான்.

பெரும்பாலான நமக்கு, குடும்பத்தினரும், சமுதாயத்தினரும் திருமணம் செய்ய தூண்டுவது சகஜமாக இருக்கும். ஆனால், இந்த வைரல் வீடியோவில் தோன்றும் பெண், இளைஞர்களுக்கு புதிய பார்வையை அளிக்கிறார். திருமணத்தை அவசரப்படாமல் செய்ய வேண்டும் என அவர் நேரடியாக கூறுகிறார். காரணம், திருமண வாழ்க்கை வெளியில் தோன்றுவது போல இனிமையானதாக இல்லை என்பது தான் அவரது கருத்து.

இந்த வீடியோவில், சேலை அணிந்த ஒரு பெண், தனது சமையலறையில் வீட்டுப் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருப்பது தெரிகிறது. பின்னர், கேமராவை நேரில் பார்த்து, ‘திருமணம் செய்ய வேண்டும் என ஆர்வம் உள்ளவர்கள் காத்திருக்கவும். முதலில் ஒரு உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். திருமணம் என்பது ஒரு மகிழ்ச்சியான விஷயம், சொர்க்கம் என பலர் நினைக்கலாம். ஆனால் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையே கெட்டுப்போகும்’ என்று கூறியுள்ளார்.

இந்த சுவாரசியமான மற்றும் சிந்திக்க வைக்கும் வீடியோவை, அக்ஷதா பண்டிட்   என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ 2.2 கோடி பார்வைகள் மற்றும் 7 லட்சம் லைக்குகள் பெற்றுவிட்டது.

பார்வையாளர்கள் கமெண்டில் நகைச்சுவையுடன் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். ஒருவர், ‘வாழ்க்கை கெட்டு போனால் கூட பரவாயில்லை, நான் கல்யாணம் திருமணம் செய்ய போகிறேன் என எழுதியிருக்க, இன்னொருவர் ‘இந்த வீடியோவை பார்த்த பின் இன்னும் 5 வருஷம் காத்திருக்கலாம்  என தோன்றுகிறது என கூறியுள்ளார். சிலர் அந்தப் பெண்மணியின் நேர்மையான அறிவுரைக்கு நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

https://www.instagram.com/reel/DCGdjH2NWyD/?utm_source=ig_web_copy_link