இந்த பரிசுகள் வீடு, சொத்து, பணம், நகைகள், நிறுவன பங்குகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்ற அசையும், அசையா சொத்துக்கள் எந்த வடிவில் இருந்தாலும் வருமான வரி விதிக்கப்படாது. இதற்கு முற்றிலும் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
திருமண பரிசுப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டாலும், புதுமண தம்பதிகள் தங்களுக்கு பரிசாக கிடைக்கும் வீடுகள் அல்லது கார்கள் போன்ற உயர்ந்த மதிப்புள்ள பரிசுப் பொருட்களுக்கு உரிய ஆவணங்களை பராமரிக்க வேண்டும். வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்யும் போது, கார் வாங்குவதற்கோ அல்லது வீடு வாங்குவதற்கோ எப்படி பணம் கிடைத்தது என்று கேட்டால், அதற்கான ஆவணங்களை காண்பிக்க வேண்டும்.
மொத்தத்தில் திருமண விசேஷத்தில் எத்தனை லட்சம் பரிசு வந்தாலும், அதற்கு வருமான வரி இல்லை என்பது தான் உண்மை.