Watch: என்ன ரோட் சைடுல ரெயில் நிக்குது.. இணையத்தை ஆக்கிரமித்த வீடியோ.. வியந்து பார்க்கும் நெட்டிசன்கள்..

By Ajith V

Published:

பொதுவாக ஒரு நபர் தனது விருப்பமான துறையில் மிகுந்த ஈடுபாடுடன் இருக்கும் போது அதற்காக எதையும் செய்ய துணிந்து ஆர்வத்துடனும் அயராது இயங்கி வருவார்கள். அப்படி ஒரு சூழலில் தான் மலையாளி ஒருவரின் வீட்டில் அவர் உருவாக்கிய காம்பவுண்டு தொடர்பான வீடியோ ஒன்று தற்போது பலரின் கவனத்தை பெற்று வருவதுடன் சபாஷ் போடவும் வைத்துள்ளது.

கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் ஒரு வீடு அமைந்துள்ளது. இங்கே பலரும் ஒரே மாதிரியான வீடுகளை தயார் செய்யும் நிலையில், இன்னொரு பக்கம் புதுமையாக வீடுகளில் ஏதாவது ஒரு டிசைனை உருவாக்கி மக்கள் மத்தியில் கவனத்தை பெற வேண்டும் என்றும் நினைப்பார்கள். புகைப்பட கலைஞர் ஒருவர் தனது வீடை கேமரா வடிவில் உருவாக்கி இருந்தார்.

இதே போல மீனவர் ஒருவர் தனது வீடை ஒரு படகின் வடிவிலும் உருவாக்கி இருந்தார். இப்படி தங்கள் ஈடுபாடுடன் இருக்கும் தொழிலுடன் வீடுகளை உருவாக்கவும் செய்வார்கள். அந்த வகையில் தான் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் தனது வீட்டின் காம்பவுண்டு சுவற்றை அப்படியே ரெயில் போல உருவாக்கி உள்ளார் ஒரு நபர்.

பார்ப்பதற்கு மிக தத்ரூபமாக ரெயிலை போலவும் இருக்க, சுவர் வளையும் இடத்தில் இன்ஜினை வடிவமைத்துள்ளார். இதன் பின்னர் ஜன்னல்கள் போல ஸ்லீப்பர் க்ளாஸ், ரெயில் பெட்டி என அமைந்துள்ளது. மேலும், வீட்டின் கேட்டும் ஏசி கம்பார்ட்மெண்ட் போல இருக்க, ஒரு நான்கு பெட்டிகள் கொண்ட ட்ரெயின் போல இந்த காம்பவுண்டை அவர் உருவாக்கி உள்ளார்.

திடீரென நாம் பார்த்தால் அப்படியே ரெயில் போலவே இருக்கும் சூழலில் அந்த துறையில் பணிபுரியும் ஒருவரின் வீடாக கூட இது இருக்கலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றது. இந்த வீடியோவை ஆனந்த ரூபணக்குடி என்ற ரயில்வே துறை அதிகாரி ஒருவர் எக்ஸ் தளத்தில் பகிர, மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

https://twitter.com/Ananth_IRAS/status/1822973838201688416

மேலும் ரெயில்வே துறையில் பணிபுரிந்து வருபவர்களுக்கும் அல்லது ரெயில் பயணங்களில் அதிகம் ஆர்வம் உள்ள நபர்களுக்கும் இந்த வீட்டின் காம்பவுண்டு ஒரு வித வியப்பை தான் நிச்சயம் கொடுத்துள்ளது. இந்த ரெயில்வே காம்பவுண்டில் இருக்கும் புதுமையை பலரும் பாராட்டி வர, நிறைய வித்தியாசமான கருத்துக்களையும் இதற்கு தெரிவித்து வருகின்றனர்.