தீர்ந்த தங்கலான் பிரச்சனை.. திட்டமிட்டபடி வெளியிட நீதிமன்றம் உத்தரவு

By John A

Published:

பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினமன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஏராளமான பொருட்செலவில் ஆதித் தமிழர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கே மிரட்டியது.

இது சீயான் விக்ரமா என்று ஆச்சர்யப்பட வைக்கும் அளவிற்கு தனது உடலை வருத்தி, கெட்டப்பையும் மாற்றி மிரட்டியிருந்தார் விக்ரம். இதனைத் தொடர்ந்து டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தியிருக்கிறது. மேலும் மினுக்கி மினுக்கி பாடல், அறுவடைப் பாடல் ஆகிய இரண்டுமே ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பினைப் பெற்றிருக்கிறது.

எம்ஜிஆருக்கு அதிர்ஷ்டம்… உலகம் சுற்றும் வாலிபன் ஜெயிக்க அதுதான் காரணமா? எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ரசிகாஸ்..!

ஜி.வி.பிரகாஷ்குமார் அசுரன் படத்திற்குப் பிறகு தனது அற்புதமான இசையைக் கொடுத்திருக்கிறார். இப்படி பலவகையிலும் சிறப்பினைப் பெற்ற தங்கலான் திரைப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மறைந்த அர்ஜுன்லால் என்பவரிடம் 10 கோடியே 35 இலட்சம் கடன் பெற்றதைத் தொடர்ந்து அதனை திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கங்குவா மற்றும் தங்கலான் படத்தினை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி தங்கலான் படத்தினை வெளியிடுவதற்கு முன்னர் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் பணத்தினை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து ஞானவேல் ராஜா ரூ. 1 கோடி டெபாசிட் செய்ததை அடுத்து தடை விலக்கப்பட்டது. இதனால் நாளை படம் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

இந்நிலையில் படத்திற்கு வாழ்த்துத் தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் சூர்யா ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். மேலும் படக்குழுவும் பட புரோமோஷன் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...