பெஹல்காம் தாக்குதல்: சித்தராமையா பேச்சுக்கு பாகிஸ்தான் ஊடகங்கள் ஆதரவு..!

  பெஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மட்டும் பயங்கரவாத தாக்குதலுக்கு பாதுகாப்பு கவனக் குறைவுதான் காரணம் என்றும், அதே நேரத்தில் பாகிஸ்தானுடன் போர்…

siddharamaiya

 

பெஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மட்டும் பயங்கரவாத தாக்குதலுக்கு பாதுகாப்பு கவனக் குறைவுதான் காரணம் என்றும், அதே நேரத்தில் பாகிஸ்தானுடன் போர் தேவையில்லை என்றும், இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவரது பேச்சு இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் ஊடகங்கள் அவருடைய பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்பட்ட பயங்கரவாதிகளை கண்டிக்கும் வகையில் சித்தராமையா ஒரு வார்த்தை கூட கூறவில்லை என்றும், காங்கிரஸ் எப்போதுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக தான் செயல்படும் என்றும் பாஜக வின் ஐடி விங் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியர்களை கொன்ற பாகிஸ்தானை எதிர்த்து பேசுவதற்கு பதிலாக, நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க செய்ய வேண்டும் என்றும், பாகிஸ்தானுடன் அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் சித்தராமையா கூறியிருப்பது முழுக்க முழுக்க பாகிஸ்தான் ஆதரவான கருத்துக்கள் என்றும், அது உண்மை என்பதை நிரூபிப்பது போல் பாகிஸ்தான் ஊடகங்கள் அவரது பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சித்தராமையா ’துரோகி’ என திட்டி, மத்திய அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தங்கள் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் குடிமக்களின் எண்ணிக்கை தெரியாது என்று கூறியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.