காஷ்மீரில் ஜோதி எடுத்த செல்பி.. இந்த இடத்திற்கு இவரால் எப்படி செல்ல முடிந்தது? ராணுவத்தினர் அதிர்ச்சி..!

  ஒரு சாதாரண புன்னகை செல்பி… ஆனால் அந்த ஓர் புகைப்படம் தான் இப்போது நாட்டின் பாதுகாப்பு, உளவு நடவடிக்கைகள், காஷ்மீர் பகுதிக்குள் பரவி வரும் ஒரு பெரும் விசாரணையின் மையமாக மாறியுள்ளது. அந்த…

jothi4

 

ஒரு சாதாரண புன்னகை செல்பி… ஆனால் அந்த ஓர் புகைப்படம் தான் இப்போது நாட்டின் பாதுகாப்பு, உளவு நடவடிக்கைகள், காஷ்மீர் பகுதிக்குள் பரவி வரும் ஒரு பெரும் விசாரணையின் மையமாக மாறியுள்ளது. அந்த புகைப்படத்தில் இருப்பவர் ஜோதி மல்ஹோத்திரா, பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கூறப்பட்டு சமீபத்தில் கைது செய்யப்பட்ட யூடியூபர்.

ஆனால் அந்த புகைப்படத்தில் பிரச்சனையானது ஜோதியின் முகபாவனையோ, புன்னகையோ அல்ல… பின்னணியில் தெளிவாக தெரியும் ஒரு சாலை, அதுதான் “காஜிகுண்ட் (Qazigund)”. பச்சை-வெள்ளை யில் சாலை பலகையில் தெரியும் அந்த ஒரு வார்த்தைதான் உளவுத்துறையை அதிர்ச்சியடைய வைத்தது. ஒரு சாதாரண சமூக ஊடகப் பதிவு என்று தோன்றிய புகைப்படம், தேசிய பாதுகாப்பு விவகாரமாக மாறியது.

காஜிகுண்ட், “காஷ்மீருக்கான வாசல்” என்று அழைக்கப்படும் இடம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ளது. இது பீர் பஞ்சால் மலைத்தொடரை கடந்த பிறகு வரும் முதல் முக்கிய இடமாகும். தேசிய நெடுஞ்சாலை எண் 44 வழியாக ஜம்முவையும் ஸ்ரீநகரையும் இணைக்கும் முக்கிய வழித் தளமாகவும், இந்திய ரயில்வேயின் வடபகுதி நிலையங்களின் முக்கியமான பகுதியாகவும் இது உள்ளது.

இது போன்று ராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இப்போது ரஷ்ய தயாரிப்பு S-400, S-125 பேச்சோரா போன்ற விமான பாதுகாப்பு கருவிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதனால் காஜிகுண்ட் பகுதியில் ராணுவ சரக்குகள், வீரர்கள், கண்காணிப்பு நடவடிக்கைகள் போன்றவை அதிகம் இருக்கும்.

ஜோதி மல்ஹோத்திரா தனது சமூக ஊடகங்களில் அந்த புகைப்படத்தை “பிரொபைல் பிக்ச்சர்” ஆக பதிவிட்டிருந்தார். ஆனால் அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட இடம், அதற்கான காலத்தையும், அவர் காஷ்மீருக்கு இரண்டு முறை சென்றதையும் வைத்து உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அவர் எடுத்த வீடியோக்கள் எல்லாம் “அழகிய சாலை பாதைகள்”, “அறியப்படாத இடங்கள்” என்ற தலைப்புகளுடன் இருந்தாலும், அந்த இடங்கள் ரயில் நிலையங்கள், ஹைவே டோல் புள்ளிகள், தகவல் tower-கள் போன்றவை. பயண வீடியோவை விட கண்காணிப்பு தேடலாகவே அதிகாரிகளுக்கு அந்த வீடியோக்கள் தோன்றியுள்ளது.

“ஏன் காஜிகுண்ட்?” என்ற கேள்வி தற்போது உளவுத்துறையிலும், ராணுவ மேலதிகாரிகளுக்கிடையே மையமாகியுள்ளது. இது ஒரு சாதாரண பயணபின்னணி தானா? அல்லது உளவுத் தகவல் திரட்ட influencer என்ற போலி தோற்றத்தில் மறைந்துள்ளதா?

உளவுத்துறை ஊடக தகவல்களின்படி, ஜோதி மல்ஹோத்திரா எடுத்த வீடியோக்களில் மிக நீளமான ட்ரோன் ஷாட்கள், சுற்றுப்புறம் குறித்த விளக்கங்கள் உள்ளன. அவை பொதுவாக சுற்றுலா பயணிகள் பார்ப்பதில்லை. குறிப்பாக ரயில் பாதைகள், பாதுகாப்பு டவர்கள் போன்ற பகுதிகள் அடிக்கடி இடம்பெற்றுள்ளன.

இப்போது, ஜோதியின் சாதனங்களில் உள்ள மெட்டாடேட்டா (metadata), GPS குறிப்புகள், நேரத்தின் அடிப்படையில் அவரது பயணங்கள் மற்றும் அந்த நேரங்களில் காஜிகுண்டில் நடந்த ராணுவ இயக்கங்களை ஒப்பீடு செய்து பார்வையிடப்படுகின்றன. மேலும், அவரது பயண ஸ்பான்சர்களை மற்றும் தொடர்புகளைப் பற்றிய விவரங்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, வெளிநாட்டு நிதி தொடர்புகள் உள்ளதா என்பதையும் விசாரிக்கின்றனர்.

உளவுத்துறை ஊடக தகவல்களின்படி, ஜோதி மல்ஹோத்திரா எடுத்த வீடியோக்களில் மிக நீளமான ட்ரோன் ஷாட்கள், சுற்றுப்புறம் குறித்த விளக்கங்கள் உள்ளன. அவை பொதுவாக சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதில்லை. குறிப்பாக ரயில் பாதைகள், பாதுகாப்பு டவர்கள் போன்ற பகுதிகள் அடிக்கடி இடம்பெற்றுள்ளன.

இப்போது, ஜோதியின் சாதனங்களில் உள்ள மெட்டாடேட்டா (metadata), GPS ஸ்தானிக குறிப்புகள், நேரத்தின் அடிப்படையில் அவரது பயணங்கள் மற்றும் அந்த நேரங்களில் காஜிகுண்டில் நடந்த ராணுவ இயக்கங்களை ஒப்பீடு செய்து பார்வையிடப்படுகின்றன. மேலும், அவரது பயண ஸ்பான்சர்களை மற்றும் தொடர்புகளைப் பற்றிய விவரங்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, வெளிநாட்டு நிதி தொடர்புகள் உள்ளதா என்பதையும் விசாரிக்கின்றனர்.

இந்த வழக்கு ஒரு மிக முக்கியமான விசயத்தை நினைவூட்டுகிறது. சமூக ஊடகத்தின் வாயிலாக பாதுகாப்பு மிக்க இடங்களை எளிதாக பதிவு செய்து பகிர முடிகிறது, அவை அபாயமாக மாறும் வாய்ப்பும் அதிகம். காஷ்மீர் போன்ற இடங்களில், புவியியல் முக்கியத்துவம் என்பது அரசியல் நிலைப்பாட்டை தீர்மானிக்கிறது. அப்படிப்பட்ட நிலையில், ஒரு சின்ன செல்பி கூட ஒரு பெரிய உளவுத்தகவல் மையாக மாறக்கூடும். எனவே இனிமேல் பயண வீடியோக்கள் பதிவு செய்பவர்கள் அரசிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.