கடந்த வாரம் புலனாய்வு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யூடியூபர் ஜோதி மால்ஹோதிராவின் வீட்டில் இருந்து ஒரு டைரியை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அந்த டைரியில் சில திடுக்கிடும் தகவல்கள் இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
‘Travel with JO’ என்ற யூடியூப் சேனலை நடத்தும் இந்த இன்ஃப்ளூயென்சர், உணர்வுப்பூர்வமான தகவல்களை பகிர்ந்ததற்கும் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்குமான சந்தேகத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜோதி மால்ஹோதிராவின் வீட்டில் காவல்துறை அதிகாரிகள் சல்லடை போட்டு சோதனை செய்தபோது ஒரு டைரி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதில் “Love you” என்ற எழுத்தும் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
“சவிதாவுக்கு பழங்கள் கொண்டு வர சொல்லு. வீட்டை கவனிக்க. நான் விரைவில் திரும்பி வருவேன்,” என்று அந்த டைரியில் எழுதப்பட்டிருந்தது. அதில் சில மருந்துகளுக்கான குறிப்புகளும் இருந்தன. அதிகாரிகள் சவிதா யார், அவள் மால்ஹோதிரா குடும்பத்திற்கு நெருக்கமானவரா என விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஹிசார் காவல் மேஸ்டர் சசங்க்குமார் சவான் கூறியதாவது: “ஜோதி மல்ஹோதிரா மற்ற யூடியூப் இன்ஃப்ளூயென்சர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். அவர்கள் பாகிஸ்தானிய பி.ஐ.ஓ.க்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர். இவர் நிதியுதவியுடன் பாகிஸ்தானுக்கு சென்று இருந்தார். பஹால்காம் தாக்கத்திற்கு முன்பு பாகிஸ்தானில் இருந்தார். அதனால் இந்த தாக்குதலுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடத்துகிறோம். மேலும் சிலரும் இவருடன் தொடர்பு கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.”
மால்ஹோதிரா பல முறை பாகிஸ்தானுக்கும் ஒரு முறை சீனாவையும் பயணம் செய்துள்ளார். பாகிஸ்தான், சீனா பயணங்களுக்குப் பிறகு ஜோதி பங்களாதேஷுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் NIA அவருடைய பங்களாதேஷ் பயண விசா விண்ணப்பப் படிவத்தை பறிமுதல் செய்துள்ளது என ஹிசார் எஸ்.பி. கூறினார்.
மால்ஹோதிரா, ஜம்மு காஷ்மீரில் உள்ள அழகான சுற்றுலா மண்டலமான பஹால்காமுக்கு பயணம் செய்திருந்தார். அதற்கு சில வாரங்கள் முன்னர் தீவிரவாதிகள் 26 பேர் கொலை செய்த சம்பவம் நடந்தது. எனவே இந்த தாக்குதலுக்கும் அவருக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.