பெஹல்காம் தாக்குதல் காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பு உச்ச நிலையில் இருக்கின்ற நேரத்தில், ஜார்கண்ட் மாநில பயங்கரவாத படையை சேர்ந்த நால்வர் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் என கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு பெண்ணும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் குல்பாம் ஹசன், ஆயன் ஜாவேத், ஷாஜாத் ஆலம் மற்றும் ஷப்னம் பர்வீன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைதுக்கு பின் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் இவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்புகளான அல்-கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும் கைதானவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 12 துப்பாக்கி வெடி தோட்டைகள், மொபைல் போன்கள், லேப்டாப்புகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள், மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த கைது நடவடிக்கை அந்த பகுதிகளில் பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து மக்களை காப்பாற்றிய செயல் என கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘இந்த கைது நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. கைதானவர்கள் சட்டவிரோத ஆயுத வர்த்தகம் மற்றும் இந்தியாவிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டிருந்தனர். விசாரணையில், இவர்கள் ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் அமைப்புடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. இந்த அமைப்பு கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி தடைசெய்யப்பட்டது. இந்த அமைப்பு தடை செய்யப்பட்ட பிறகு, இந்தியாவில் இதுவே முதல் கைது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கை, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளின் உறுதியை வெளிப்படுத்துகிறது. தடை செய்யப்பட்ட அமைப்புகளின் ஆயுதங்களும், பதிப்பிட்ட ஆவணங்களும் மீட்கப்பட்டதை வைத்து, இவர்கள் பயங்கரவாத பரப்பும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் கருத்துக்களை பரப்பவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் முயற்சி செய்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த நபர்களின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களையும், முழு கும்பலையும் பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. கைப்பற்றப்பட்ட மொபைல் போன்கள் மற்றும் லாப்டாப்புகளிலிருந்து கூடுதல் ஆதாரங்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.