இன்னும் ஒன்று பாக்கி இருக்கிறது.. அது பாகிஸ்தான் திருடிய காஷ்மீர் பகுதியை மீட்பது.. பாகிஸ்தான் நிருபர் கேள்விக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெய்சங்கர்.. பல்பு வாங்குவது பாகிஸ்தானின் பரம்பரைக்கு புதுசா என்ன?

சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரம் குறித்த பேச்சுக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற ஒரு சூழலில், பாகிஸ்தானை சேர்ந்த ஒரு மூத்த பத்திரிக்கையாளர் எழுப்பிய கூர்மையான கேள்விக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அளித்த வெளிப்படையான…

jaisankar

சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரம் குறித்த பேச்சுக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற ஒரு சூழலில், பாகிஸ்தானை சேர்ந்த ஒரு மூத்த பத்திரிக்கையாளர் எழுப்பிய கூர்மையான கேள்விக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அளித்த வெளிப்படையான பதில், சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.

பாகிஸ்தான் பத்திரிக்கையாளரின் கேள்வி “இந்தியாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பால் காஷ்மீர் மக்கள் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். இதை தீர்க்க டிரம்ப்பின் நட்பை மோடி பயன்படுத்துவாரா? 7 மில்லியன் காஷ்மீரிகளையும் கட்டுப்படுத்த 1 மில்லியன் இந்திய வீரர்கள் அங்கு உள்ளனர். காஷ்மீர் குறித்து நீங்கள் ஏன் எதுவும் பேசவில்லை? நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று நேரடியாக கேள்வி எழுப்பினார். இந்த கேள்வி, அரங்கில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பதில், “காஷ்மீர் விவகாரத்தை நாங்கள் சிறப்பாக கையாண்டு, அதில் பெரும்பாலானவற்றிற்கு தீர்வு கண்டுவிட்டோம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உறுப்பு 370-ஐ நீக்கியது முதல் படி. இது காஷ்மீரை இந்தியாவின் மற்ற மாநிலங்களை போல ஒருங்கிணைக்க உதவியது. இரண்டாவது படி, வளர்ச்சி, பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சமூக நீதியை மீண்டும் நிலைநிறுத்தியது. இதன் மூலம், காஷ்மீர் மக்கள் இந்திய அரசின் நலத்திட்டங்களை முழுமையாக பெறும் வாய்ப்பை பெற்றனர். மூன்றாவது படி, அதிக வாக்காளர்கள் பங்கேற்ற தேர்தலை நடத்தியது. இது காஷ்மீரில் ஜனநாயகத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது.”

தொடர்ந்து பேசிய அமைச்சர், “நாங்கள் காத்துக்கொண்டிருப்பது, பாகிஸ்தான் திருடிய காஷ்மீரின் பகுதிகள் மீண்டும் இந்தியாவிடம் வருவதற்காகத்தான். அது நடந்தால், காஷ்மீர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்” என கூறினார்.

இந்திய அமைச்சரின் இந்த வெளிப்படையான பதில், சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. சிலர் அவரது தைரியமான பேச்சைப் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோவை இந்தியர்கள் வைரலாக்கி வரும் நிலையில் பாகிஸ்தான் நிருபருக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை என்று பாகிஸ்தானை சேர்ந்த நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.