இதுதான் இந்தியாவின் கடைசி ரயில் நிலையம்.. எந்த ரயிலும் இங்கு நிற்காது.. சுவராஸ்யம்

By Keerthana

Published:

கொல்கத்தா: இதுதான் இந்தியாவின் கடைசி ரயில் நிலையம்.. ஆனால் இப்போது எந்த ஒரு பயணிகள் ரயிலும் நிற்காது. காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் பயணித்த இந்த ரயில் நிலையம் இந்தியாவிற்கே மிகவும் அடையாளம் ஆகும். இது எங்கு உள்ளது என்பதை பார்ப்போம்.

இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய பொதுத்துறை நிறுவனமாக இருக்கிறத. இங்கு 68,000 கி.மீ.க்கும் மேல் நீளமான இரும்புப் பாதைள் இருக்கிறது. தினமும் கோடிக்கணக்கான பயணிகள் பயணம் செல்கிறார்கள். லட்சக்கணக்கான சரக்குகள் இந்த ரயில்கள் மூலம் ஏற்றிச் செல்லப்படுகின்றன

இந்திய- வங்கதேசம் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சிங்காபாத் ரயில் நிலையம் தான்இந்தியாவின் கடைசி ரயில் நிலையம். இந்த ரயில் நிலையம் மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் உள்ள ஹபீப்பூர் நகரத்தில் அமைந்துள்ளது . சிங்காபாத் ரயில் நிலையத்தில் எந்த ரயிலும் இங்கே நிற்காது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட சிங்காபாத் ரயில் நிலைய பாதை வழியாகவே சுபாஷ் சந்திரபோஸ், மகாத்மா காந்தி போன்ற முக்கிய தலைவர்கள் பயணித்துள்ளார்கள். இந்தியாவில் தலைநகராக ஒரு காலத்தில் இருந்தது கொல்கத்தா என்பது பலருக்கும் தெரியாது. அன்றைய கல்கத்தாதான் வெள்ளையர்கள் காலத்தில் ஆட்சி செய்யும் நகரமாக இருந்தது. ஒரு காலக்கட்டத்தில் தான் அவர்கள் டெல்லிக்கு ஆட்சி நிர்வாகத்தை மாற்றினார்கள்.

வெள்ளையர்கள் அன்றைய காலக்கட்டத்திலேயே கொல்கத்தாவிற்கும் டாக்காவிற்கும் இடையே ஒரு முக்கியமான பாதையாக அமைத்தார்கள். கொல்கத்தாவை விட வெள்ளையர்கள் காலத்தில் டாக்கா செல்வ செழிப்பான வர்த்தக நகரம். சுதந்திரத்திற்கு முன் மக்கள் பயணிக்கவும் வர்த்தகம் செய்வதற்கான பொருட்களைக் கொண்டு செல்ல சிங்காபாத் ரயில் நிலைய பாதை வழியாகவே டாக்காவிற்கு பாதை போடப்பட்டது.

சிங்காபாத் ரயில் நிலையம் இன்றைக்கு பழங்கால கட்டடக் கலைக்கு சான்றாக, ஆங்கிலேயர்களின் நினைவை சுமந்து அடையாளமாக நிற்கிறது. இங்கே போடப்பட்டுள்ள ரயில் இரும்பு தண்டவாளங்கள்,. சிக்னல் லைட், டிக்கெட் கவுண்டர்கள் என அப்படியே பழமை மாறாமல் அப்படியே இருக்கிறது. அந்த ரயில் நிலையம் ஒரு நினைவுச் சின்னமாக மட்டுமே பராமரிக்கப்படுகிறது.

வங்கதேசம் என்ற புதிய நாடு உருவான பின்னர் 1978 இல் போடப்பட்ட ஒப்பந்தம் காரணமாக சிங்கபாத்திலிருந்து சரக்கு ரயில்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படுகிறது. பயணிகள் ரயில்கள் எப்போதுமே இங்கு நின்றது இல்லை.. இந்தியாவின் கடைசி ரயில் நிலையமான சிங்காபாத் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.