இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் மார்ச் 31ஆம் தேதி ஹரியானாவின் ஜிந்த்-சோனிபட் பாதையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டது.
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலின் முக்கிய அம்சங்கள்:
இந்த ரயில், வடக்கு ரயில்வேயின் டெல்லி பிரிவு கீழ் வரும் 89 கிமீ நீளமுள்ள ஜிந்த்-சோனிபட் பாதையில் இயங்கும்.
2,638 பேர் பயணிக்கக்கூடிய 8 பயணிகள் பெட்டிகள் இதில் அமைக்கப்பட்டுள்ளன.
ஹைட்ரஜன் சிலிண்டர்கள் சேமிக்க இரண்டு கூடுதல் பெட்டிகள் இருக்கும்.
இந்த ரயிலின் எஞ்சின் பவர் 1200 HP என்றும், இந்த ரயில் மணிக்கு 110 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.
இந்தியாவின் ஜீரோ கார்பன் திட்ட இலக்கில் இந்த ரயில் முக்கிய பங்காற்றும். உலகிலேயே மிக சக்திவாய்ந்த 1,200 HP ஹைட்ரஜன் என்ஜினை வடிவமைத்து, இந்தியா ஒரு முக்கிய நிலைமையை எட்டியுள்ளது.
2023-24 நிதியாண்டில், 35 ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் அடிப்படையிலான ரயில்களை உருவாக்க, ரயில்வே அமைச்சகம் ரூ.2,800 கோடி ( நிதியை ஒதுக்கி இருந்த நிலையில் தற்போது முதல் ரயில் தயாராகிவிட்டதை அடுத்து, விரைவில் அடுத்தடுத்து புதிய ஹைட்ரஜன் ரயில்கள் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.