இந்தியாவின் சிக்கன் நெக் குறித்த விவகாரத்தில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கடுமையாக எச்சரிக்கையை பங்களாதேஷுக்கு விடுத்துள்ளார்.
இந்தியாவின் சில்லிகுரி Chicken’s Neck போல் இருப்பது குறித்து நோபல் பரிசு பெற்ற வங்கதேச இடைக்கால அதிபர் முகமது யூனூஸ் கூறிய கருத்துக்கு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பதிலடி கொடுத்து. பங்களாதேஷின் பங்களாதேஷின் நிலவியல் பலவீனங்களை குறிப்பிட்டுள்ளார்.
“இந்தியாவுக்கு ஒரு Chicken’s Neck இருக்கிறது. ஆனால் பங்களாதேஷுக்கு இரண்டு Chicken’s Neck உள்ளன. பங்களாதேஷ் எங்கள் Chicken’s Neckஐ தாக்கினால், நாம் அவர்கள் இரண்டும் Chicken’s Neckகளையும் தாக்குவோம். பங்களாதேஷில் உள்ள சிட்டகொங் துறைமுகத்துடன் இணைக்கும் பகுதியில் அமைந்துள்ள Chicken’s Neck, இந்தியாவின் Chicken’s Neckஐ விட மெல்லியது. அது ஒரு கல் வீச்சு தொலைவில் தான் இருக்கிறது.”
மேலும், பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா மேற்கொண்ட தாக்குதல்களை குறிப்பிட்ட அவர், இந்தியாவின் ராணுவ சக்தியை பங்களாதேஷ் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், “இந்தியாவை தாக்க பங்களாதேஷ் 14 முறை பிறக்க வேண்டும்” என்றார்.
இந்த விவகாரம், இந்திய வடகிழக்கு மாநிலங்களைப் பற்றி பங்களாதேஷ் தரப்பில் வந்த சர்ச்சையான பேச்சுகளுக்கு பின்னர் உருவாகியுள்ளது. முன்னாள் பங்களாதேஷ் இராணுவ அதிகாரி மற்றும் யூனூசின் நெருங்கிய ஆலோசகர் ஒருவர், “பங்களாதேஷ் சீனாவுடன் சேர்ந்து இந்திய வடகிழக்கு பகுதிகளை கைப்பற்ற வேண்டும்” என கூறியிருந்தார்.
மார்ச் மாதத்தில் சீனாவில் நடந்த ஒரு வணிக நிகழ்ச்சியில், யூனூஸ் கூறியதாவது: “இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்கள் நிலத்துடன் மட்டுமே சூழப்பட்டவை. அவை பெருங்கடலை எட்டும் ஒரே வழி பங்களாதேஷ் வழியாகத்தான் உள்ளது. இந்த பகுதியில் இந்தியப் பெருங்கடலை காப்பாற்றும் ஒரே காவலர் நாம் தான்.” எனச் சொன்னார்.
இந்தக் கருத்துகள், இந்திய அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்வினையை கிளப்பியது.
முக்கியமாக, 2024 ஆகஸ்ட் மாதத்தில் ஷேக் ஹசீனாவின் அரசு வீழ்ந்த பிறகு, பங்களாதேஷில் சிறுபான்மையினரான ஹிந்து சமூகத்தின் மீது நடந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்த தவறியதாலும், இந்தியா–பங்களாதேஷ் உறவு பதட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.