திடீரென உயர போகும் கச்சா எண்ணெய் விலை.. உலக நாடுகள் அதிர்ச்சி.. ஆனால் இந்தியா மட்டும் 90 நாட்கள் தப்பித்து கொள்ளும்.. அதுதான் மோடியின் ராஜதந்திரம்.. ரூ.13,295.93 கோடி செலவை மிச்சப்படுத்தும் இந்தியா..

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை மீண்டும் ஒருமுறை ஏற்ற இறக்கங்களுக்கு தயாராகி வரும் நிலையில், இந்தியா தனது பெட்ரோலிய இருப்புகளை மீண்டும் நிரப்பவும், அவற்றின் திறனை விரிவாக்கவும் தயாராகி வருகிறது. எரிசக்தி பாதுகாப்பை உறுதி…

india oil

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை மீண்டும் ஒருமுறை ஏற்ற இறக்கங்களுக்கு தயாராகி வரும் நிலையில், இந்தியா தனது பெட்ரோலிய இருப்புகளை மீண்டும் நிரப்பவும், அவற்றின் திறனை விரிவாக்கவும் தயாராகி வருகிறது. எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்திய அரசு மேற்கொண்டு வரும் இந்த கட்டாய நடவடிக்கை குறித்துப் பார்ப்போம்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 65 டாலருக்கும் குறைவாகக்குறைந்துள்ளது. இருப்பினும், முக்கிய உற்பத்தியாளர்களிடமிருந்து விநியோகம் குறைந்து வருவதுடன், ரஷ்ய நிறுவனங்களான ரோஸ்னெஃப்ட் மற்றும் லுகோயில் ஆகியவற்றின் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகள்உலக விநியோகச் சங்கிலியை பாதிக்கக்கூடும். இதனால், கச்சா எண்ணெய் விலை விரைவில் மிக வேகமாக உயரக்கூடும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

விலைகள் உயர்வதற்கு முன் இருப்புகளை நிரப்புவது, பின்னர் அதிக செலவை குறைக்கும் என்பதால், இந்தியா தற்போதே சுதாரிக்க தொடங்கியுள்ளது.

தற்போது, இந்தியாவிடம் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிலத்தடியில் 5.3 மில்லியன் டன் கச்சா எண்ணெய் சேமிப்புத் திறன் உள்ளது. இதில், இன்றுவரை 3.66 மில்லியன் டன் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களை விரைவாக நிரப்ப, இந்திய பெட்ரோலிய இருப்பு நிறுவனம் மூலம் பிரதமர் மோடி அரசு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.

இந்தியா தனது எரிசக்தி பாதுகாப்பை 90 நாட்கள் தேவையை பூர்த்தி செய்யும் இலக்குடன், இருப்பு தளங்களை விரிவாக்க தொடங்கியுள்ளது. ஒடிசாவில் 4 மில்லியன் டன் திறன் கொண்ட புதிய இருப்பு மையம் உட்பட இரண்டு புதிய தளங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் உலகளாவிய எரிசக்தி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள மற்றொரு திட்டத்தை மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் எடுத்துள்ளது. மேலும் ஆறு இருப்பு தளங்களுக்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த நடவடிக்கை இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் தினசரி வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்தியா தனது எண்ணெய் தேவையில் 88% இறக்குமதி செய்கிறது. கச்சா எண்ணெய் விலையில் ஒரு டாலர் அதிகரித்தால்கூட, இந்தியாவின் இறக்குமதி செலவில் $1.5 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.13,295.93 கோடி) அதிகமாகும்.

அமெரிக்கத் தடைகள் காரணமாக, தள்ளுபடி விலையில் கிடைக்கும் ரஷ்ய எண்ணெயை வாங்குவது கடினமானால், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி செலவு $2.7 பில்லியன் வரை உயரக்கூடும். இது ரூபாயின் மதிப்பு, பணவீக்கம் மற்றும் போக்குவரத்து செலவுகளை நேரடியாக பாதிக்கும்.

இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் அமெரிக்கா, பிரேசில், மேற்கு ஆசியா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவை நோக்கித் தங்களது கொள்முதல் ஆதாரங்களை மாற்றத் தயாராகி வருகின்றன. தற்போதுள்ள வணிக பங்குகளுடன் சேர்ந்து, இந்தியாவின் கையிருப்பு 70 முதல் 72 நாட்களுக்கான தேசிய தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

சர்வதேச எரிசக்தி ஏஜென்சியின் முழு உறுப்பினர் ஆவதற்கான உலகளாவிய அளவுகோல் 90 நாட்கள் தேவைக்கான இருப்பாகும். அந்த முழு இலக்கை அடையவும், வரவிருக்கும் சவால்களுக்கு தயாராகவும், இந்தியா தனது இருப்புகளை அதிகரிக்கவும், பாதுகாப்பை வலுப்படுத்தவும் அதிக எண்ணெய் சேமித்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.