எல்லோரும் போர் மேல கவனத்தை வச்சிருக்காங்க.. ஆனால் இந்தியாவும் துபாயும் தங்கத்துல கண்ணு வச்சிருக்குது.. லண்டன்லயும் சுவிட்சர்லாந்துலயும் தங்கம் இருந்த காலம் மலையேறிப்போச்சு… இப்போ அண்டை நாட்டுல எங்களுக்காக தங்கம் ரிசர்வ் ஆகி நிக்குது! தூரத்துச சொந்தத்தை விட பக்கத்து வீட்டு தோழமைதான் பலம்! உலகமே டாலரை துரத்தும்போது, இந்தியா தங்கத்தை தன் பக்கம் வரவழைக்குது! இனி வரப்போற காலம் ‘Global South’ஓட காலம்… அதுல இந்தியா தான் தலைவன்!

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே தங்கம் வர்த்தகத்தை மையமாக கொண்டு உருவாகி வரும் புதிய பொருளாதார கட்டமைப்பு குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு குறித்து சர்வதேச அரசியல் வல்லுனர்கள் சில…

india dubai gold

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே தங்கம் வர்த்தகத்தை மையமாக கொண்டு உருவாகி வரும் புதிய பொருளாதார கட்டமைப்பு குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு குறித்து சர்வதேச அரசியல் வல்லுனர்கள் சில ஆச்சரியமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

உலகளாவிய பொருளாதார சூழலில் தங்கம் எப்போதும் ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. குறிப்பாக போர்க்காலங்கள் மற்றும் பணவீக்க காலங்களில் காகித பணத்தை விட தங்கத்தின் மதிப்பு நிலையானது. உலக அளவில் வர்த்தகம் செய்யப்படும் தங்கத்தில் சுமார் 20 முதல் 30 சதவீதம் ஐக்கிய அரபு அமீரகத்தின் வழியாகவே செல்கிறது. இந்தியா தனது தங்கம் இறக்குமதி தேவைகளுக்காக சுவிட்சர்லாந்து மற்றும் லண்டன் சந்தைகளை அதிகம் சார்ந்திருந்த நிலையை மாற்றி, தற்போது துபாயை ஒரு முக்கிய மையப்புள்ளியாக மாற்றியுள்ளது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் கீழ், இறக்குமதி உரிமங்களுக்கான காலக்கெடுவை 2026 ஜூன் 30 வரை இந்தியா நீட்டித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா மற்றும் அமீரகம் இடையே தங்க வர்த்தகத்திற்காக ஒரு சட்டப்பூர்வ பாதை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதல் கட்டணங்கள் இன்றி, முன்னரே கணிக்கக்கூடிய வகையில் தங்கத்தின் வரத்து இந்தியாவிற்கு உறுதி செய்யப்படுகிறது. இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு, நிறுவன ரீதியான கையிருப்பு மற்றும் சாமானிய மக்களின் சேமிப்பு என இரண்டு தளங்களிலும் தங்கம் பெருமளவு தேவைப்படுகிறது. துபாய் உலகெங்கிலும் இருந்து வரும் தங்கத்தை சுத்திகரித்து, தரமான முத்திரையுடன் சந்தைப்படுத்துவதால், இந்தியாவிற்கு நம்பகமான மற்றும் தரமான தங்கம் கிடைப்பது இந்த ஒப்பந்தத்தின் மூலம் எளிதாக்கப்பட்டுள்ளது.

மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ள ‘ஸ்விஃப்ட்’ பண பரிமாற்ற முறை மற்றும் டாலரின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட இந்தியா எடுக்கும் முயற்சிகளுக்கு இந்தத் தங்க வர்த்தகம் ஒரு மாற்று பாதையாக அமைகிறது. லண்டன் அல்லது சுவிட்சர்லாந்து சந்தைகளில் தங்கம் வாங்கும் போது ஏற்படும் டாலர் சார்ந்த சிக்கல்களையும், கண்காணிப்புகளையும் தவிர்க்க அமீரகம் உடனான இந்த நேரடி தொடர்பு உதவுகிறது. டாலருக்கு மாற்றாக ஒரு பாதையை உருவாக்குவதன் மூலம், சர்வதேச தடைகள் அல்லது பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும் காலங்களில் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படாமல் தற்காத்து கொள்ள இது ஒரு சிறந்த ‘ஹெட்ஜிங்’ முறையாக செயல்படுகிறது.

ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் இருந்து வரும் கச்சா தங்கத்தை ஐக்கிய அரபு அமீரகம் சுத்திகரித்து, முறைப்படுத்துகிறது. இவ்வாறு சுத்திகரிக்கப்படும் தங்கம் குறைந்த இறக்குமதி வரி மற்றும் அதிக லாப வரம்புடன் இந்தியாவிற்கு வருகிறது. பல நேரங்களில் போர்க்கால சூழலால் தங்கத்தை நேரடியாக கொண்டு வர முடியாவிட்டாலும், துபாயில் உள்ள பாதுகாப்பு கிடங்குகளில் இந்தியாவிற்கான தங்கம் ‘முன்பதிவு’ செய்யப்பட்டு வைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தங்க கையிருப்பை 1000 டன் என்ற இலக்கை நோக்கி தடையின்றி நகர்த்த உதவுகிறது. லண்டன் போன்ற தொலைதூர சந்தைகளில் தங்கத்தை வைத்திருப்பதை விட, அண்டை நாடான அமீரகத்தில் நமது கட்டுப்பாட்டில் தங்கம் இருப்பது பலமானது.

இந்த வர்த்தக உறவு என்பது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு Win-Win ஒப்பந்தமாகும். அமீரகத்திற்கு இந்தியாவின் பிரம்மாண்டமான சந்தை ஒரு நிலையான வருமானத்தை உறுதி செய்கிறது. குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் எண்ணெய் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படும் போது, தங்க வர்த்தகம் அவர்களின் பொருளாதாரத்தை தாங்கி பிடிக்கிறது. பதிலுக்கு இந்தியாவிற்குத் தேவையான உணவு பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகளை வழங்க அமீரகம் உறுதி அளிக்கிறது. இதன் மூலம் இரு நாடுகளும் ஒருவரையொருவர் சார்ந்து ஒரு வலுவான பொருளாதார பிணைப்பை உருவாக்கியுள்ளன.

முடிவாக, மோடி மற்றும் ஜாயித் அல் நஹ்யான் ஆகிய இரு தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு, வெறும் காகித ஒப்பந்தங்களை தாண்டி ஒரு நீண்ட கால திட்டமாக உருவெடுத்துள்ளது. உலகளாவிய தெற்கு நாடுகளுக்கான ஒரு மாற்று பொருளாதார மையமாக துபாயை மாற்றுவதும், இந்தியாவின் பொருளாதார பாதுகாப்பை தங்கத்தின் மூலம் உறுதிப்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும். அமெரிக்காவின் மாறிவரும் கொள்கைகள் மற்றும் டாலர் ஆயுதமாக்கப்படுவதற்கு எதிராக இந்தியா உருவாக்கி வரும் இந்தத் தன்னாட்சி பொருளாதார கட்டமைப்பு, வரும் காலங்களில் உலக அரங்கில் இந்தியாவின் வலிமையை மேலும் உயர்த்தி பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.