ஆனால், சில மாதங்களிலேயே 9 மணி முதல் 5 மணி வரை வேலை செய்யும் கார்ப்பரேட் வாழ்க்கை தனக்கானது அல்ல என்பதை ராதிகா உணர்ந்தார். “நம்மைப் போன்ற பெண்களுக்கு இந்த வேலை சரியாக வராது” என்று நினைத்த அவர், பெண்களுக்கு ஒரு நல்ல சேலை பிராண்டு இல்லை என்பதையும் கவனித்தார். அதனால், “நாமே ஏன் ஒரு பிசினஸாக இதை தொடங்கக்கூடாது?” என்று யோசித்தார்.
தயக்கமின்றி, அவர் தனது ஐந்து இலக்க சம்பளத்துடன் இருந்த கார்ப்பரேட் வேலையை ராஜினாமா செய்தார். “இரண்டு வருடங்களுக்கு முன்பு, நான் ஒரு பெரிய வேலையை விட்டுவிட்டு சேலை பிசினஸை தொடங்குவேன் என்று யாராவது கூறியிருந்தால், கண்டிப்பாக நான் சிரித்திருப்பேன். ஆனால், எனது முடிவில் உறுதியாக இருந்தேன்,” என அவர் கூறினார்.
தொடக்கத்தில் சில தயக்கங்கள் இருந்தன. “நாம் டிசைன் செய்யும் சேலைகள் பெண்களுக்கு பிடிக்குமா?” என்று அவர் யோசித்தார். ஆனால், “நம்முடைய டிசைன் நமக்கே பிடித்து விட்டால், கண்டிப்பாக மற்ற பெண்களுக்கும் பிடிக்கும்” என்ற நம்பிக்கையுடன் தொழிலில் இறங்கினார்.
தற்போது, வெற்றிகரமான சேலை தொழிலில் ஈடுபட்டு வரும் ராதிகா ஒரு மிகப்பெரிய தொழிலதிபராக மாறியுள்ளார். இன்று, அவருடைய நிறுவனம் ஒரு பிரபலமான பிராண்டாக உயர்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் அவருடைய சேலைகளை வாங்கி ஆதரிக்கின்றனர்.
கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்தபோது வந்த சம்பளத்தை விட, தற்போது பல மடங்கு வருமானம் கிடைக்கிறது. “இதுதான் எனது வழி” என்று அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
“நீங்கள் ஐஐடியில் படித்தது சுலபமான விஷயம் அல்ல. ஆனால், உங்கள் கடின உழைப்பின் பயனாக, நீங்கள் தொழிலதிபராக மாறியுள்ளீர்கள். மென்மேலும் வளர வாழ்த்துகள்!” என சமூக வலைதள பயனர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
