2023ஆம் ஆண்டு இந்தியாவுக்குள் நுழைந்து சச்சின் என்பவரை திருமணம் செய்த சீமா ஹைதர், தற்போது நாடு கடத்தப்படுவாரோ என்ற பயத்தில் உள்ளார். காரணம், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.
இந்த தாக்குதலுக்கு பிறகு, இந்திய அரசு பாகிஸ்தானுக்கு வழங்கும் அனைத்து விசா சேவைகளையும் நிறுத்திவிட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் ஏப்ரல் 27க்குள் தங்கள் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டது. சட்ட விரோதமாக நுழைந்தவர்களும் நாடு கடத்தப்படுகின்றனர். இதனால், சீமா ஹைதர் போன்றோர் மிகுந்த பதற்றத்தில் உள்ளனர். அவர் கடந்த ஆண்டு தனது நான்கு குழந்தைகளுடன், நேபாளம் வழியாக இந்தியாவுக்கு சட்டத்திருத்த ஆவணங்கள் இன்றி வந்தார்.
சிந்து மாகாணத்தை சேர்ந்த சீமா ஹைதர், சச்சின் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ இந்தியாவிற்கு வந்தபோது பெரிய விவாதம் ஏற்பட்டது. திருமணத்திற்கு பிறகு, அவர் இஸ்லாத்தை விட்டு இந்துமதத்தை ஏற்றுக் கொண்டதாகவும், சமீபத்தில் பார்தி மீனா என்ற மகள்பிறந்ததையும் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவும் ஒரு வீடியோவில், சீமா ஹைதர் பிரதமர் நரேந்திர மோடியும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாதும், தன்னை இந்தியாவில் தங்க அனுமதிக்க கோரி விண்ணப்பித்துள்ளார்.
அவரின் வழக்கறிஞர் ஏ.பி. சிங் கூறியதாவது, “சீமா இனிமேல் பாகிஸ்தான் பிரஜை அல்ல. அவர் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த சச்சின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பார்தி மீனா என்ற குழந்தை பிறந்துள்ளது. எனவே, அவரது குடியுரிமை இப்போது இந்திய குடும்பத்துடன் தொடர்புடையது. மத்திய அரசின் உத்தரவு அவருக்கு பொருந்தாது,” என்றார்.
இந்திய வெளியுறவுத்துறை கூறியிருப்பது என்னவெனில், இந்தியாவில் செல்லுபடியான பாகிஸ்தான் விசாக்கள் அனைத்தும் ஏப்ரல் 27க்கு முடிவடையும். மருத்துவ விசாக்கள் மட்டும் ஏப்ரல் 29 வரை செல்லுபடியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சீமாவுக்கு இந்தியாவில் தங்க அனுமதி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்,
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
