வீட்டுக்கடன் தவணை கட்ட முடியவில்லை.. வங்கியை கொள்ளையடிக்க வந்த நபர்.. திடீரென ஏற்பட்ட ட்விஸ்ட்..!

  வீட்டுக் கடன் தவணை கட்ட முடியாத மன அழுத்தத்தில் இருந்த ஒருவர், வங்கியை கொள்ளை அடிக்க வந்த நிலையில், அவர் கையில் இருந்த துப்பாக்கியால் ஏற்பட்ட ட்விஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் 31…

gun1

 

வீட்டுக் கடன் தவணை கட்ட முடியாத மன அழுத்தத்தில் இருந்த ஒருவர், வங்கியை கொள்ளை அடிக்க வந்த நிலையில், அவர் கையில் இருந்த துப்பாக்கியால் ஏற்பட்ட ட்விஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் 31 வயதுடைய நபர் ஒருவர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் திடீரென துப்பாக்கியுடன் வந்து கொள்ளையடிக்க முயன்றார். தபால் துறையில் பணியாற்றும் அவர், அந்த வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியிருந்ததாகவும், ஆனால் தொடர்ச்சியாக சில தவணைகள் கட்ட முடியாததால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து, வங்கியை கொள்ளையடித்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து வீட்டுக் கடன் தவணை கட்டிவிடலாம் என்று முடிவு செய்து, அவர் துப்பாக்கி உடன் வங்கிக்கு வந்தார். வந்தவுடன் அவர் துப்பாக்கியை காட்டி, வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை தன்னிடம் கொடுக்குமாறு கூறினார்.

இந்த நிலையில், திடீரென வாடிக்கையாளர்களில் ஒருவர் அந்த நபரை பின்னால் இருந்து பிடித்து, அவர் கையில் உள்ள துப்பாக்கியை பிடுங்கினார். அப்போதுதான் தெரிந்தது, அந்த துப்பாக்கி உண்மையான துப்பாக்கி அல்ல என்றும், சிறுவர்கள் விளையாடும் பொம்மை துப்பாக்கி என்றும்.

இதனை அடுத்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அவரை போலீசார் பிடித்து சென்றனர். விசாரணை செய்தபோது தான், அதே வங்கியில் வீட்டு கடன் வாங்கியதாகவும், ஆனால் பல தவணைகள் கட்ட முடியாததால் வங்கி ஊழியர்களின் பேச்சு தனக்கு மன அழுத்தம் ஏற்படுத்தியதாகவும், இதனால் தான் அந்த வங்கியை கொள்ளையடிக்க முயற்சித்ததாகவும் அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து, கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பொம்மை துப்பாக்கியை வைத்துக்கொண்டு வங்கியை கொள்ளையடிக்க முயன்ற அவரை, அப்பாவி என்பதா, அவர்கள் கிரிமினல் என்பதா என்றே தெரியவில்லை என, இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.