சமூக வலைதளங்கள் என எடுத்துக் கொண்டால் தற்போது வேடிக்கையாக இருக்கும் போட்டோக்கள் அல்லது வீடியோக்கள் என எந்த விஷயங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டே இருக்கும். அதன் பின்னணி பற்றி பல தகவல்கள் தெரியவில்லை என்றாலும் அதில் இருக்கும் ஏதாவது சிறப்பம்சமான விஷயங்களை அடிப்படையில் அதனை அதிகமாக பகிர்ந்து பலரும் பலவிதமான கருத்துகளையும் குறிப்பிடுவார்கள்.
அப்படி ஒரு சூழலில் தான் இந்தியாவின் வட மாநிலங்களில் ஏதோ ஒரு மாநிலத்தில் ஒரு வீட்டின் பணி நடந்து வருவதும் அது இருக்கும் இடம் தொடர்பான தகவலும் தான் பலரையும் சிரிப்பலையில் அழுத்தி உள்ளது. இங்கே நகர வாழ்க்கையில் வாழும் பலரும் சொந்த வீட்டில் இல்லாமல் வாடகை வீட்டில் தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். அப்படி இருப்பவர்களுக்கு சொந்தமாக இடம் வாங்கி அதில் நினைத்தது போல ஒரு வீடு கட்டி தனது குடும்பத்தினருடன் குடியேற வேண்டும் என்பது மிகப்பெரிய ஒரு கனவாக இருக்கும்.
வீடு கட்டுறதே பெரிய லட்சியம்..
உலகம் இயங்கிக் கொண்டிருக்கும் வேகத்திற்கு நாம் முடிந்த அளவுக்கு சீக்கிரம் பணம் சம்பாதித்து நிலத்தை வாங்கினால் மட்டும்தான் வீடு என்கின்ற கனவும் நிறைவேறும். ஒவ்வொரு நாளும் கடக்க நிலத்தின் விலையும், வீடு கட்ட தேவையான பொருட்களின் விலையும் ஜெட் வேகத்தில் ஏறிக்கொண்டே போகிறது. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் நிலத்திற்கான மதிப்பு எப்போதும் எகிறும் என்பதால் பலரும் வீடு கட்ட வேண்டும் என்ற கனவை மிகத் துரிதப்படுத்தி அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு புகைப்படத்தில் வீடு கட்ட நிலமே இல்லாமல் அந்த நபர் செய்த விஷயம் தான் அதிகம் வேடிக்கையாக பார்க்க வைத்துள்ளது. இது தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள நிலையில் அதில் சாலைக்கு மேல் இருக்கும் இடத்தில் ஒருவர் வீடு கட்டி உள்ளார். இரண்டு நிலை கட்டிடத்தில் உருவாக்கப்பட்டு வரும் இந்த வீடு பாதிக்கும் மேற்பட்ட வேலை தான் முடிந்துள்ளது.
என்னய்யா வீடு அந்தரத்துல நிக்குது..
இன்னும் வேலை மீதமிருக்கும் நிலையில் சாலைக்கு இரண்டு பக்கமும் அந்த வீடு பலமாக நிற்பதற்கான தூணும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல அந்த வீட்டிற்கு வருவதற்கான வழியும் இடது பக்கத்தில் இருந்து ஆரம்பமாக இன்னும் நிறைய பணிகள் மீதம் இருப்பதாக தெரிகிறது. ஒரு பக்கம் இந்த புகைப்படத்தையும் பார்த்து சமூக வலைதளங்களில் பலரும் இது போலியாக இருக்கலாம் என்று தெரிவித்தாலும் பார்ப்பதற்கு நிஜமாக ஏதோ ஒரு இடத்தில் அதுவும் சாலைக்கு மேல் அந்தரத்தில் நிற்பது போன்ற வீட்டின் புகைப்படம் நிஜம் என்றே தெரிகிறது.
இங்கே ஒவ்வொருவரும் இடம் வாங்கவே அவதிப்பட்டு கொண்டிருக்கும் சூழலில் மிக லாவகமாக சாலைக்கு மேல் வீடு கட்ட நடந்த முயற்சி எங்கே என்பதும் சரிவர தெரியவில்லை. அதேபோல இந்த சம்பவங்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா அல்லது என்ன ஆனது என்பது பற்றி எந்த விவரங்களும் தெரியாத நிலையில் இந்த புகைப்படம் ஒன்றே தற்போது இணையவாசிகள் மத்தியில் விவாதத்தை உருவாக்கியுள்ளது.