ஹிந்தி தெரியாது போடா… பெங்களூரு விமான நிலைய டிஸ்பிளேவில் ஹிந்தி நீக்கம்..!

  பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம், தனது டிஸ்பிளே பலகைகளில் இருந்து ஹிந்தி மொழியை முழுமையாக நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது விமான நிலையத்தில் உள்ள அனைத்து அறிவிப்பு பலகைகளும் கன்னடத்திலும் ஆங்கிலத்திலும்…

hindi

 

பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம், தனது டிஸ்பிளே பலகைகளில் இருந்து ஹிந்தி மொழியை முழுமையாக நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது விமான நிலையத்தில் உள்ள அனைத்து அறிவிப்பு பலகைகளும் கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் மட்டுமே காட்டப்படுகின்றன. இந்த முடிவு, சமூக ஊடகங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது. பலரும் வித்தியாசமான கருத்துக்களுடன் விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், விமான நிலைய அறிவிப்புகள் கன்னடம், ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் மட்டுமே வெளியிடப்படுவதை காணலாம். ஹிந்தி மொழி அதில் இடம்பெறவில்லை. இந்த வீடியோக்கு தற்போது 20 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன, மேலும் இது பலரும் பகிர்ந்ததால் மொழி விவகாரம் மீண்டும் தலைப்புச் செய்தியாகி இருக்கிறது.

சில சமூக வலைதள பயனாளர்கள், இந்த முடிவை “முட்டாள்தனமானது” என கடுமையாக விமர்சிக்கின்றனர். ஆங்கிலம், கன்னடம் தெரியாதவர்கள் எப்படி செல்வது? ஹிந்தி இல்லாமல் விமான நிலையத்தில் பயணிக்க முடியுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூருவுக்கு ஆங்கிலம், கன்னடம் தெரிந்தவர்களே வருகிறார்களா? மெட்ரோ ஸ்டேஷன்களில் ஹிந்தி இல்லாமல் இருக்கலாம், ஆனால் விமான நிலையம், ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களில் இருக்க வேண்டும். “துபாய் இளவரசர் கூட இந்தியாவை மதிக்க ஹிந்தியில் ட்வீட் செய்கிறார். ஆனால் நம்ம நாட்டில்தான் ஹிந்தியை அவமதிக்கும் நிலை என்ற கருத்துக்கள் பதிவாகி வருகிறது.

மேலும் ஒருவர் “நான் ஹிந்தி திணிப்புக்கு எதிரி தான். ஆனால் விமான நிலையம், ரயில்வே ஸ்டேஷன்களில் ஹிந்தி இல்லாமல் இருப்பது சரியல்ல.  மக்கள் பயணிக்க வசதியாக இருக்க வேண்டும், சிக்கலாக இருக்கக்கூடாது’ என்றார்.

ஹிந்தி மொழியை விமான நிலைய டிஸ்பிளே பலகைகளில் இருந்து நீக்கிய முடிவை விமான  பயணிகளின் வசதிக்கு எதிரானது என பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
கன்னடம், ஆங்கிலம் மட்டுமே போதுமா?” என்ற கேள்வி தற்போது சமூக ஊடகங்களை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.